Asianet News TamilAsianet News Tamil

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...

Some cool tips to showcase a spacious room at home too ...
Some cool tips to showcase a spacious room at home too ...
Author
First Published Dec 11, 2017, 1:45 PM IST


சென்னை போன்ற நகர்பகுதிகளில் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப வீட்டின் அளவும் நிர்ணயிக்கப்படுவதாக இருக்கிறது. அதனால் வீடு வாங்குபவர்கள், கட்டுபவர்கள் குறைந்த பரப்பளவுள்ள இடத்தையே வாங்குவது தவிர்க்கமுடியாததாகி இருக்கிறது. 

அப்படிப்பட்டவர்கள் மனதில் அறைகள் இடவசதியின்றி குறுகியதாக காட்சியளிப்பது பற்றிய கவலை குடிகொண்டிருக்கும். அந்த மனநிலையில் இருந்து விடுபட வீட்டை அலங்கரிக்கும் யுக்தியில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் போதும்.

1.. தேவைக்கு ஏற்ப பொருட்கள் தேர்வு

இடம் எவ்வளவு இருக்கிறது என்பதை விட அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். வீடு விசாலமான இடவசதியுடன் தோற்றமளிக்க முதல் வழி தேவைகளை குறைத்து கொள்வதாக தான் இருக்கும். அழகுக்காகவும், ஆசைக்காகவும் பொருட்களை வாங்கி குவிப்பதை விட எது அறைக்கு பொருத்தமாக அமைந்து அழகியலை ஏற்படுத்தி கொடுக்கும் என்று பார்க்க வேண்டும்.

அதனால் அறைக்கு எது அவசியமாக தேவைப்படும் பொருளோ அந்த பொருட்களையே தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். ஏனெனில் அவசியமான தேவைகளை முதலிலேயே முடிவு செய்து அதன்படி பொருட்களை வாங்கிவிட்டால் பின்னர் இடவசதிக்கு ஏற்ப பொருட்களை கொண்டு அறையை அழகுபடுத்தி விடலாம். 

எப்போது வேண்டுமானாலும் அறைக்குள் மாற்றங்களை செய்து கொள்ளலாம். அதுவும் அறைக்கு புதுமையான தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். எக்காரணம் கொண்டும் அறைக்குள் குப்பைகளை சேரவிடக்கூடாது.

2.. இடநெருக்கடியை குறைக்கும்

அதாவது தேவையற்ற பொருட்களை உடனே தூக்கி எறிந்துவிட வேண்டும். அதன் மூலம் இடம் மிச்சமாகும். பராமரிப்பு பணியும் குறையும். அறையின் இடவசதியை கருத்தில் கொண்டு பர்னிச்சர்கள் தேர்வும் அமைய வேண்டும். 

அதை வாங்கும்போதே வைப்பதற்கு போதுமான இடவசதி இருக்கிறதா? அதனால் அறைக்குள் நெரிசலான சூழ்நிலை உருவாகுமா? என்று கவனிக்க வேண்டும். பர்னிச்சர்கள் இப்போது பலவகை பயன்பாடு கொண்டவையாக சந்தைகளில் கிடைக்கின்றன.

அதை சோபாவாகவோ, படுக்கையாகவோ தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் வசதிகள் இருக்கின்றன. அத்தகையை பர்னிச்சர்கள் இடநெருக்கடியை குறைக்கும். நான்கு பர்னிச்சர்களின் தேவையை ஒரு பர்னிச்சரே பூர்த்தி செய்வது இடநெருக்கடியை குறைப்பதோடு பண செலவையும் குறைக்கும். ஆகவே பர்னிச்சர் தேர்வில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

3.. விசாலமாக காட்சியளிக்கும்

அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய உயரமான அலமாரிகளை தேர்ந்தெடுப்பது அறையை இடவசதியுடன் காண்பிப்பதற்கு ஏதுவாக மாறும். அந்த அலமாரி ஆடைகள், புத்தகங்கள், அடிக்கடி தேவைப்படும் பொருட்களை எடுப்பதற்கு வசதியாக கபோர்ட்டுடன் இருக்கிறதா? என்று பார்த்து வாங்க வேண்டும். 

அந்த அளவுக்கு பல பொருட்களும் ஒரே இடத்தில் வைக்கும்படி அமைந்தால் அதிக அலமாரிகள் தேவைப்படாது. வீடும் விசாலமாக காட்சியளிக்கும்.

சுவர்களில் ஓவியங்கள் இடம்பிடிப்பது அறைக்கு அழகு சேர்க்கும். புதுமை, பழமை கலந்த கலைநயமிக்க பொருட்களும் விசாலமான இடவசதி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். 

அவைகளை ஆங்காங்கே இடம்பெற செய்வதும் அறையின் அழகுக்கு அழகு சேர்க்கும். பிரகாசமான விளக்குகளும், வண்ணங்களும் அறைக்குள் இடநெருக்கடி இல்லாத தோற்றத்தை உருவாக்கும்.

4.. கவலைப்பட வேண்டியதில்லை

வரவேற்பறையில் அலங்கார விளங்குகளை தொங்கவிடுவது ஆடம்பரத்துக்கு துணையாகவும் அமையும்.

அதேபோல் வீட்டுக்குள் இயற்கை வெளிச்சத்தை எவ்வளவு அதிகமாக கொண்டு வர முடியுமோ? அந்த அளவிற்கு கொண்டு வந்துவிட வேண்டும். 

சமையல் அறையை மாடுலர் கிச்சன் போன்ற தோற்றத்துக்கு மாற்றிவிட வேண்டும். தேவைக்கேற்ப அலமாரிகளை அமைத்து அவற்றுள் பொருட்களை அடுக்கி வைத்துவிட வேண்டும்.

அப்படி செய்யும்போது இடவசதியை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சமையல் அறை பார்ப்பதற்கு இடநெருக்கடி இல்லாததுபோன்று தோற்றமளிக்கும். 

முக்கியமாக தேவையற்ற பொருட்களுக்கு இடம்கொடுக்காமல் இருந்தாலே போதும். அவைகளை அவ்வப்போது அப்புறப்படுத்தி விடுவது விசாலமான அறைக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதாக இருக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios