Asianet News TamilAsianet News Tamil

புது வீடு, இடம் வாங்கிவது பெரிதல்ல...ரிஜிஸ்ட்ரேஷன் பிறகு கட்டாயம் இதை செய்ய மறக்காதீங்க..!

after land registration we have to check tax file also
after  land registration we have to check  tax file also
Author
First Published Apr 11, 2018, 1:30 PM IST


வீடு அல்லது மனை வாங்கிய உடன் நமது கடமை முடிந்துவிட்டது.இனி இந்த சொத்து நமக்கு தான். எந்த பிரச்னையும் இல்லை என தான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் நாம் சிலவற்றை முக்கியமாக கவனிக்க வேண்டும் என்பதை என்றும் மறந்து விட கூடாது

அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம்

1. சொத்து வரி பதிவேடு

நகராட்சி அலுவலகம் பராமரித்து வரும் சொத்து வரி பதிவேடுகளில்  புதிய உரிமையாளர் பெயரை  பதியாவிட்டால் ரசீதுகள் அனைத்தும் பழைய உரிமையாளர் பெயரில் வரும். இதனால் வரி செலுத்த முடியாத   சூழல் உருவாகி, அதற்கான அபராதமும் விதிக்க நேரிடும்.

after  land registration we have to check  tax file also

எனவே நம்முடைய பெயர் மற்றும் விலாசத்திற்கான அனைத்து  ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில்,பெயர் மாற்றம் செய்ய   நமக்கு தேவையான ஆவணங்கள் இவைதான் ...

1.  கடைசியாக வரி கட்டியதற்கான ரசீது

2. வீடு அல்லது நிலம் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட பத்திர நகல்

3. வீட்டு வசதி சங்க கட்டிடமிருந்து வீடு வாங்கப்பட்டிருந்தால் அதற்கான     நோ அப்ஜக்ஷன் சான்றிதழ் பெற வேண்டும்

4. பூர்த்தி செய்த விண்ணப்பம்

விண்ணப்பம்

சொத்து வரிக்கான பெயர் மாற்றத்தை நீதித்துறை முத்திரையோடு, அந்த   விண்ணப்பதை அந்த பகுதியில் உள்ள தாசில்தாரரிடம்  சமர்பிக்க வேண்டும். மேலும் ஆட்சபேனை இல்லா சான்றிதழை கட்டாயம்   அளிக்க வேண்டும்.

வீட்டு வரி

புதிய வீடுகள் அல்லது  நிலங்களுக்கு, புன்செய் நிலங்களாக  இருந்தாலும் சரி, நன்செய் நிலங்களாக இருந்தாலும் சரி, நாம் நம் பெயரில் வரி செலுத்தி வருகிறோமா என்பதை உறுதி  செய்துக்கொள்ள  வேண்டும்.அல்லது மற்ற நபர்கள் பெயரில் வரி செலுத்தி வந்தாலும், அதற்கான பிரச்சனை நமக்கு தான். பெரும் தலைவலியாக மாறிவிடும்.  யார் பெயரில் நாம் வரி செலுத்துகிறோமோ அவர்கள் மூலம் நமக்கு   பிரச்சனை வர நேரிடும்

பட்டா மாற்றம்

இதே போன்று நாம் வாங்கிய நிலத்தின் மேல், சரியான முறையில் வரி  செலுத்தி வந்தாலும், பட்டா மாற்ற செய்ய வேண்டும். அதனையும் அவ்வப்போது செக் செய்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அதனையும் http://taluk. tn.nic.in/eservicesnew/home.html என்ற வலைத்தளத்தில் சரி பார்த்து கொள்வது முக்கியம். மாற்றம் ஏதாவது இருப்பின், உடனடியாக  அதற்கான நடவடிக்கை எடுப்பது நல்லது.

after  land registration we have to check  tax file also

இதேபோன்று, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்து வழங்கும் போது, தக்க வாரிசு சான்றிதழ் பெற்று, பட்டாவை மாற்றிக்கொள்ளலாம்.

மேலும், மனையின் சர்வே எண் முதல் அனைத்தும் சரியாக குறித்து வைத்துக்கொண்டு பராமரிப்பது நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios