Asianet News TamilAsianet News Tamil

கான்கிரீட்டில் ஏற்படும் துரு, அரிப்பு, வலுவிழப்புக்கு “ஜென்ட்ரிஃபிக்ஸ்” தான் தீர்வு…

Remedy for concrete dust and other problems
Remedy for concrete dust and other problems
Author
First Published May 29, 2017, 1:52 PM IST


 

கான்கிரீட்டில் விரிசல் என்பது போலவே அரிப்பு என்பதும் பெரும் தொல்லை. ஆனால் அதற்கு தற்போது “ஜென்ட்ரிஃபிக்ஸ்” என்னும் வேதியியல் தயாரிப்பு வந்துவிட்டது.

கான்கிரீட்டை வலுவிழக்கச் செய்வதில் தீவிரமாகச் செயல்படுவது அரிப்பு. வேதிப்பொருட்களால் ஏற்படும் துரு, அரிப்பு, வலுவிழப்பு ஆகிய தொல்லைகளை அறவே ஒழிப்பதற்கு ஜென்ட்ரிஃபிக்ஸ் வந்துவிட்டது. 

இது தாது அடிப்படையிலான ஒரு சேர்மானப் பொருள். அரிப்பைத் தடுக்கவும், தவிர்க்கவும் இதை தாராளமாகப் பயன்படுத்தலாம்.

பழைய கட்டுமானங்களைப் பழுதுபார்க்கும் தேவைகளுக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதனை வேறு எந்தவிதக் கரைப்பான்களுடனும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டியது இல்லை.

ஜென்ட்ரிஃபிக்ஸ் கொண்டு அரிப்பைத் தடுக்கும் நடவடிக்கை களை மேற்கொள்ள முடிவு செய்து விட்டீர்கள் என்போம்.  பாதுகாப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய பகுதியை முதலில் ஈரமாக்க வேண்டும். ஈரமாக  இருக்க வேண்டும் என்றுதான் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது.

ஜென்ட்ரிஃபிக்ஸை அப்படியே தண்ணீருடன் கலந்து பயன்படுத்த வேண்டியதுதான். தண்ணீருடன் கலக்கும் வேலையைச் செய்யும் நேரத்தில் தொடர்ச்சியாகக் கலக்கிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சீரான கூழ் போன்ற பக்குவத்தில் தயாரிக்க வேண்டும். கட்டிகள்  தேங்கக் கூடாது.

கரைப்பு வேலையைக் கவனமாக மேற்கொள்ள வேண்டும்.இது ஐந்து நிமிடத்திற்குள் முடிந்து விடக் கூடிய வேலைதான். அலட்சியம் காட்டாமல் மேற்கொள்ள வேண்டும். மெதுவாகச் சுழன்று கலக்கும் வேலையைச் செய்யும் இயந்திரங்களையும் இதற்குப் பயன்படுத்தலாம்.

கலக்கப்படும் கலவை எந்த அளவு பக்குவத்தில் அமைய வேண்டும் என்பதற்கேற்ப பொறுமையாகக் கலக்கிக் கொண்டு வர வேண்டும். அதிகமாக நீர்த்துப் போகவும் விடக் கூடாது. ரொம்பவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது. தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளலாம்.

பெயின்ட் அடிப்பதைப் போல் அடிக்க வேண்டியதுதான். இதற்குப் பொருத்தமான பிரஷை எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்புக் கம்பிகளின் மேல் அவற்றின் உடற்பகுதியை நன்கு மூடும்படி கலவையைப் பூச வேண்டும்.

இவ்வாறு இரண்டு கோட் அடிப்பது அவசியம். கம்பிகள் குறுக்கும் நெடுக்கமாக அடுக்கப்பட்டுக் கட்டுக் கம்பிகளால் இணைக்கப்பட்டிருப்பது வழக்கம். கலவையைக் கம்பிகளின் மேல் பூசும்போது இந்தக் கட்டுக் கம்பிகளின் மேலும் கலவை பூசப்படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

இது அரிப்பை அண்டவிடாமல் செய்வதற்கான கவசத்தை அணிவிப்பது போன்ற வேலை. தவிரவும், இணைப்புகளை மேலும் உறுதியாக்கவும் உதவும். இந்தத் தேவைகளுக்காகவே ஜென்ட்ரிஃபிக்ஸ் பூசப்படுகிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு வேலைகளைச் செய்ய வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் பிரஷ்கள் விசயத்திலும் கவனமாக இருங்கள். குச்சங்கள் குட்டையானவையாக அமைக்கப்பட்டிருக்கும் பிரஷ்களையே பயன்படுத்துங்கள்.முதலில் ஒரு கோட் அடித்து முடித்த பிறகு இரண்டாவதாக இன்னொரு கோட் அடியுங்கள். முதல் கோட் பாதுகாப்பதற்கு. இரண்டாவது கோட் பழுதுபார்க்கும் வேலைகளுக்காக.

ஜெர்மானிய தொழிற்நுட்ப ஒத்துழைப்போடு ஜென்ட்ரி ஃபிக்ஸை மெக் பாக்கெமி நிறுவனம் இந்தியாவில் தயாரித்து அளிக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios