Asianet News TamilAsianet News Tamil

அதிமுக அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

Sweets offering sweets at AIADMK office
Sweets offering sweets at AIADMK office
Author
First Published Nov 23, 2017, 5:36 PM IST


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் சென்றனர். தலைமையகம் சென்ற அவர்கள், தொண்டர்களுக்கும், அமைச்சர், உள்ளிட்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா அணியும் ஒபிஎஸ் அணியும் தங்களுக்கே கட்சியும் சின்னமும் சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்தனர். ஆனால் சின்னம் யாருக்கும் ஒதுக்கப்பட வில்லை. 

அப்போது, சசிகலா தரப்பில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் ஒபிஎஸ் க்கு 12 எம்.எல்.ஏக்களே ஆதரவு தெரிவித்தனர். 

இந்நிலையில், அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியோரிடம் ஏழு கட்டங்களாக விசாரணையை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதாவது இரட்டை இலை சின்னமும் கட்சியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கே என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் எடப்பாடி - பன்னீர் தரப்பு மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். 

Sweets offering sweets at AIADMK office

எடப்பாடி-பன்னீர் அணிக்கே இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளதில் கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்காக தற்போது பெரும்பாலான தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடி பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு ஸ்வீட் கொடுத்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் சென்றனர். தலைமையகம் சென்ற அவர்கள், தொண்டர்களுக்கும், அமைச்சர், உள்ளிட்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதன் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளதாகவும் இந்த சந்திப்புக்குப் பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios