Asianet News TamilAsianet News Tamil

எத்தனை தொகுதிகள் வேண்டும் ? தர தயார் !! ஆனால் இடைத் தேர்தல் நடத்தக்கூடாது ? பாஜகவைத் தெறிக்கவிடும் அதிமுக !!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட தயார் என்றும், 10 தொகுதிகள் கூட ஒதுக்கித் தர தயாராக இருக்கிறோம் ஆனால் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு  இடைத் தேர்தல் நடத்தக் கூடாது என்று பாஜகவிடம் அதிமுக சார்பில் பேரம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

no by elections in 21 constutuency
Author
Chennai, First Published Feb 12, 2019, 7:38 AM IST

வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி பேசி முடிக்கப்பட்டுளளது. அந்தக் கூட்டணியில் மதிமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளதாக கூறப்படுகிறது.

no by elections in 21 constutuency

இதே போல் அதிமுக- பாஜக  பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தல் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

no by elections in 21 constutuency

அதன்படி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்போடு இடைத் தேர்தல் அறிவிப்பும் வரலாம் என எதிபார்க்கப்படுகிறது. ஆனால் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் குறைந்தது 8 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றால்தான் ஆட்சியில் தொடர முடியும் என ஒரு நெருக்கடியான சூழல் உள்ளது. அதனால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளார்.

no by elections in 21 constutuency

இந்நிலையில்தான் பாஜகவுடன் நடைபெற்று வரும் கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கேட்கும் தொகுதிகளை ஒதுக்கித் தந்து விடுவது என்றும், அதே நேரத்தில் இடைத் தேர்தல்களை நடத்தாமல் முடிந்த அளவு தள்ளிப் போடுவது டீல் பேசப்படுடள்ளதாக கூறப்படுகிறது.

no by elections in 21 constutuency

இதன் ஒரு பகுதியாகத்தான் நாடாளுமன்றத்தில் தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக கடுமையாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் பாஜகவை அதிமுக நிர்பந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
  no by elections in 21 constutuency
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலோடு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகள் உட்பட 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், அந்த 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்குமா என்கிற சந்தேகம்  எழுந்துள்ளது. கூட்டணி விஷயத்தில் தற்போது யார்? யாரை மிரட்டுகிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios