Asianet News TamilAsianet News Tamil

ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பா? கரூரில் காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி போர்க்கொடி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றி காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு.

MP to contest parliamentary elections Congress party in Karur decided not to give chance to Jothimani vel
Author
First Published Feb 13, 2024, 8:00 PM IST

கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கரூர், தான்தோன்றிமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கரூர்  மாவட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணி ஆகியோரின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்; திமுக வாக்குறுதியை சுட்டிக்காட்டி விவசாயிகள் போராட்டம்

பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று ஜோதிமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜோதிமணி தொகுதியில் சரிவர பணியாற்றாமலும், பொதுமக்கள் மற்றும் சொந்த கட்சியினரிடம் சரியான அணுகுமுறை இல்லாத காரணத்தாலும், கூட்டணி கட்சிகளிடமும் வெறுப்புணர்வை ஏற்படுத்திய காரணத்தால் தொகுதி முழுவதும் அவருக்கு பெரும் அதிருப்தி உள்ளது. எனவே, ஜோதிமணிக்கு கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் நிர்வாகிகளிடமும் ஜோதிமணி மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக கூட்டத்தின் வாயிலாக கண்டனத்தை பதிவு செய்தனர். இக்கூட்டத்தில் தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமான கரூர் மாவட்ட முன்னாள் தலைவர் பேங்க் சுப்பிரமணியன் என்பவருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்; கைக்குழந்தையுடன் களத்தில் இறங்கி போக்குவரத்தை சரி செய்த காவலர்

தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு தடபுடலாக அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. எம்.பி ஜோதிமணிக்கு எதிராக கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினரிடமே எதிர்ப்பு கிளம்பியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios