Asianet News TamilAsianet News Tamil

Indian Navy : பெருமைமிகு இந்திய கடற்படை - அடுத்த தலைவராக நியமனம் செய்யப்பட்டார் அட்மிரல் தினேஷ் திரிபாதி!

Admiral Dinesh Tripathi : இந்திய கடற்படையின் அடுத்த தளபதியாக அட்மிரல் தினேஷ் திரிபாதியை இந்திய அரசாங்கம் நியமித்துள்ளது. திரிபாதி தனது 40 ஆண்டுகால பயணத்தில் பல முக்கியமான பணிகளில் பணியேற்றியுள்ளார்.

Indian Navy Adminiral Dinesh Tripathi appointed as next indian navy chief ans
Author
First Published Apr 19, 2024, 3:26 PM IST

அட்மிரல் தினேஷ் திரிபாதி இந்திய கடற் படையின் புதிய அட்மிரலாக வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி தனது புதிய பதவியை ஏற்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடற்படை ஊழியர்களின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, திரிபாதி மேற்கு கடற்படைக் கட்டளைத் தளபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சைனிக் பள்ளி ரேவா மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமி, கடக்வாஸ்லாவின் முன்னாள் மாணவர் தான் தினேஷ் திரிபாதி. அவர் ஜூலை 1, 1985 இல் இந்திய கடற்படையில் நியமிக்கப்பட்டார். தகவல் தொடர்பு மற்றும் எலக்ட்ரானிக் வார்ஃபேர் நிபுணரான திரிபாதி, கடற்படையின் முன்னணி போர்க்கப்பல்களில் சிக்னல் கம்யூனிகேஷன் அதிகாரியாகவும் எலக்ட்ரானிக் வார்ஃபேர் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். 

காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி குத்திக் கொலை.. ஆத்திரத்தில் சக மாணவன் செய்த கொடூரம்..

இந்திய கடற்படை கப்பல்களான வினாஷ், கிர்ச் மற்றும் திரிசூல் ஆகியவற்றிற்கு தலைமை தாங்கியுள்ளார் தினேஷ் திரிபாதி. மும்பையில் உள்ள மேற்கத்திய கப்பற்படையின் கடற்படை நடவடிக்கை அதிகாரியாகவும், கடற்படை நடவடிக்கைகளின் இயக்குனறாகவும், பல்வேறு முக்கியமான செயல்பாட்டு மற்றும் பணியாளர் நியமனங்களையும் அவர் பெற்றுள்ளார்.

ரியர் அட்மிரல் பதவிக்கு அவர் பதவி உயர்வு பெற்றதும், கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைப் பணியாளர்களின் (கொள்கை மற்றும் திட்டங்கள்) உதவித் தலைவராகவும், கிழக்குக் கடற்படையின் அதிகாரியாகவும் பணியாற்றினார். கோவிட்-19 தொற்றுநோயின் தீவிரத்தன்மை இருந்தபோதிலும், பல சிக்கலான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருந்து போராடியவர் தினேஷ் திரிபாதி.

திரிபாதி வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் பட்டம் பெற்றவர், அங்கு அவருக்கு திம்மையா பதக்கம் வழங்கப்பட்டது. அவர் 2007-08 இல் ரோட் தீவில் உள்ள நியூபோர்ட், அமெரிக்க கடற்படை போர் கல்லூரியில் கடற்படை உயர் கட்டளை பயிற்சி மற்றும் கடற்படை கட்டளை கல்லூரியில் பயின்றார், அங்கு அவர் மதிப்புமிக்க ராபர்ட் இ பேட்மேன் சர்வதேச பரிசை வென்றார்.

முதல் பேட்ச் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை பிலிப்பனைஸுக்கு அனுப்பியது இந்தியா..

Follow Us:
Download App:
  • android
  • ios