Asianet News TamilAsianet News Tamil

இ-பாஸால் எந்த பலனும் கிடைக்காது: இத ட்ரை பண்ணுங்க - கே.சி.பழனிசாமி சொல்லும் யோசனை!

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறையால் எந்த பலனும் கிடைக்காது என முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்

Former aiadmk mp and mla kc palanisamy says epass for ooty and kodaikanal is no use and gave idea smp
Author
First Published Apr 30, 2024, 2:10 PM IST

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கொரோனா கால கட்டத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை உதகை மற்றும் கொடைக்கானலில் மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும். இதில் உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வேண்டும். இ-பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை கொடுக்க வேண்டும். இ-பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உத்தரவை மீண்டும் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறையால் எந்த பலனும் கிடைக்காது என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இபாஸ் நடைமுறையால் ஏற்படும் சாதக, பாதகங்களையும் அவர் பட்டியலிட்டு, மாற்று யோசனையையும் முன்வைத்துள்ளார்.

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ சர்ச்சை: அறிக்கை கேட்கும் தேசிய மகளிர் ஆணையம்!

இதுகுறித்து கே.சி.பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இந்த E Pass நடைமுறை மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன? 

* யார் யார் வருகிறார்கள், எவ்வளவு பேர் வருகிறார்கள்  என்கிற புள்ளி விவரங்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கும். அந்த தரவுகளின் அடிப்படையில் அதிக கூட்ட நெரிசல், போக்குவரத்து ஆகியவற்றை ஒழுங்குபடுத்தலாம். 

* ஒரே குடும்பத்தில் தனி தனி வாகனங்களில் வருபவர்கள் ஒரே வாகனத்தில் வருவார்கள் இதன் மூலம் வாகனங்களின் எண்ணிக்கையும் சற்று குறையும். அரசு பேருந்து, ரயில்களில் கூட்டங்கள் அதிகரிக்கும். 

* வசதி உள்ளவர்கள் இந்த சிரமங்களை தவிர்க்க அங்கு ஒரு சிறிய இடத்தையாவது வாங்கிக் கொள்வார்கள் . இதன் மூலம் ஊட்டி, கொடைக்கானலில் நிலத்தின் மதிப்பு கூடலாம்.

ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இந்த E Pass நடைமுறை மூலம் கிடைக்கும் சிரமங்கள் என்ன? 

* இந்த E Pass நடைமுறை மூலம் லஞ்சம், ஊழல் போன்ற அதிகார துஸ்பிரயோகங்கள் அதிகமாக நடைபெறும். 

* மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் சாலையின் நுழைவு வாயிலில் சில சமூக விரோதிகள் காவல் துறை உதவியோடு Green Tax என்று அனைத்து வாகனங்களிடமும்  வசூல் செய்கிறார்கள். ஆனால் அது போன்ற அரசு உத்தரவு எதும் இருப்பதாக தெரியவில்லை. அந்த பணம் அரசாங்கத்திற்கும் செல்வதில்லை. கடந்த மூன்று ஆண்டுகலாமாக அனைவருக்கும் தெரிந்து நடைபெரும் இந்த கொள்ளையை தடுக்க எந்த அரசு அதிகாரியும் முன்வைரவில்லை. இதை முதலில் அரசு தடுக்க வேண்டும். E Pass நடைமுறை மூலம் மேலும் இதுபோன்ற துஸ்பிரயோகங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* இந்த E Pass நடைமுறை இந்தியாவுக்குள் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தடையின்றி சென்று வரலாம் என்ற தனிமனித உரிமைகளை பாதிப்பது போல் உள்ளது. நாளை இதை முன்னுதாரணமாகக் கொண்டு சென்னை போன்ற பெருநகரங்களிலும் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த இதுபோன்ற உத்தரவு வேண்டும் என்ற கோரிக்கை எழும். 

 

 

* இதற்கு பதிலாக  1.) காரமடை - கல்லாறு- மேட்டுப்பாளையம் By Pass திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது,  2.) லவ்டேல் - HPF இந்த பகுதியில் ஊட்டி நகருக்குள் செல்லாமல் ஒரு மற்றுபாதை சீராக்கப்படலாம். 3.) மசினகுடி  - கோத்தகிரி சாலை   ஊட்டி நகருக்குள் செல்லாமல் மாற்று பாதை ஒழுங்குபடுத்தப்படலாம்.  

* சட்ட விரோதமான கட்டடங்கள், சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படலாம், சட்டவிரோதமாக மரம் வெட்டுவது வனவிலங்குகளை துன்புறுத்துவது போன்ற நிலுவையில் உள்ள வழக்குகளிலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம். 

* சொந்த நாட்டிற்குள்ளே பாஸ்போர்ட் வாங்கி விட்டு செல்ல வேண்டும் என்பது போல் Pass வாங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமல்ல. நீதிமன்றத்தின் நோக்கம் சரியானதாக இருக்கலாம் ஆனால் அதனால்  பெரிய அளவில் எந்த பலனும் ஏற்பட வாய்ப்பில்லை.

* பண பலம் இல்லாத பாமர மக்களுக்கு இது சிரமத்தை தான் உண்டாக்கும். தமிழக அரசு இந்த உத்தரவை நீதிமன்றத்தில் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் அல்லது மேல் முறையீடு செய்ய வேண்டும். 

* இதே போல கொடைக்கானலிலும் அடிப்படை வசதிகளையும்  மாற்று பாதைகளையும் உருவாக்கி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தலாம்.  இதை ஒழுங்குபடுத்த காவல்துறையும், வருவாய் துறையும் இணைந்து சரியான திட்டமிடுதலை மேற்கொண்டால் தான் சரியான தீர்வாக இருக்குமே தவிர E Pass கொடுப்பதன் மூலம் எந்த பலனும் கிடைக்காது.” என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios