Asianet News TamilAsianet News Tamil

இதுக்குதான் உதவும்னு இல்ல; எல்லாத்துக்கும் உதவும் உயர்ந்த வஸ்து "சுக்கு"...

sukku has lot of medical benefits
sukku has lot of medical benefits
Author
First Published Nov 22, 2017, 1:24 PM IST


சுக்கு:

அன்றாடச் சமையலில் கூட்டுவனவற்றுள் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது.

சுக்கு இதற்குத்தான் உபயோகிக்கலாம். இதற்கு கூடாது என்ற வரம்பே இல்லை. எந்த காலத்துக்கும், எதற்கு வேண்டுமானாலும் யாவரும் பயன்படுத்தக் கூடிய எளிய ஆனால் உயர்ந்த வஸ்து. 

அகத்தியர் இதனை 'ஈதுக்குதவும் தீதுக்குதவா தென்றோரு விதியிலை நவசுறு குணமிதுவே' என்றார் நவசுறு எனில் சுக்கு.

உடல் உற்ற வாய்வை எல்லாம் அகற்றிவிடும். 

வாத ரோகங்கள் யாவும் போகும். 

பசியைத் தூண்டும். 

மன அகங்காரத்தை ஒடுக்கும்; 

சிர நோய், சீதளம், வாத குன்மம், வயிற்றுக்குத்தல், நீர் பீனிசம், நீரேற்றம், சலதோடம், கீல்பிடிப்பு, ஆசன நோய், தலைவலி, பல்வலி, காதுகுத்தல், சுவாசரோகம் ஆகிய எல்லா வியாதிகளும் போகும். 

வாய்வு உஷ்ணம் சீதளம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவாயினும் இந்த சுப்பிரமணி தீர்த்து வைக்கும்.

மதியம் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் பெரு விரலில் பாதி அளவுக்கு தோல் இல்லாத சுக்கை இஞ்சியை சாப்பிட்டது போலவே சிறுக சிறுக சாப்பிட வேண்டும்.

பொதுவாக ஒரு சுக்கு துண்டை மேல்தோல் நீக்கி நறுக்கி ஒரு குவளை நீரில் போட்டுக் காய்ச்சி சிறிது பால் சர்க்கரை கலந்து தினமிரு வேளை குடித்துவர மேல்கண்ட நோயெல்லாம் விலகும்.

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால் கோலை ஊன்றி நடந்தோர் கோலை விட்டு குலாவி நடப்பாரே! என்பது பண்டைய தமிழ்மொழி.

சுக்கு ஒரு பழங்கால் பெனிசிலின் என்று சொன்னால் மிகையல்ல. 

Follow Us:
Download App:
  • android
  • ios