Asianet News TamilAsianet News Tamil

சாக்லேட் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு ரத்த வாந்தி... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..

மளிகைக் கடையில் காலாவதியான சாக்லேட்டை வாங்கி சாப்பிட்ட ஒன்றரை வயது பெண் குழந்தை ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Punjab toddler vomits blood after eating expired chocolates from grocery shop Rya
Author
First Published Apr 24, 2024, 9:43 AM IST

மளிகைக் கடையில் காலாவதியான சாக்லேட்டை வாங்கி சாப்பிட்ட ஒன்றரை வயது பெண் குழந்தை ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. போலீஸார் மற்றும் சுகாதாரத் துறையினர் நடத்திய விசாரணையில், சாக்லேட்டுகள் காலாவதியானது என்பது தெரியவந்தது.

லூதியானாவைச் சேர்ந்த சிறுமி, தனது பெற்றோருடன் பாட்டியாலாவுக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது உறவினர், விக்கி கெஹ்லாட், உள்ளூர் மளிகைக் கடையில் சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளார். அச்சிறுமி வீடு திரும்பிய பிறகு சாக்லேட்களை உட்கொண்டுள்ளார். ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமியின் வாயில் இருந்து இரத்தம் வர ஆரம்பித்துள்ளது. மேலும் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவப் பரிசோதனையில் சிறுமி விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

Daytime Sleeping : பகல் நேர தூக்கம் இந்த ஆபத்தை அதிகரிக்கலாம்.. அதிர்ச்சி தகவல்..

இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறை மற்றும் மாநில சுகாதாரத்துறையிடம் புகார் அளித்தனர். சுகாதார அதிகாரிகள் குழு புகார்தாரருடன் மளிகை கடைக்கு விரைந்து வந்து மாதிரிகளை சேகரித்தனர். அந்த கடையில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்கப்பட்டதை சுகாதாரத்துறை உறுதி செய்தது. கடையில் இருந்து காலாவதியான மற்ற தின்பண்டங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கடந்த மாதம், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், 10 வயது சிறுமி, தன் பிறந்தநாளில் கேக் சாப்பிட்டதால் ஃபுட் பாய்சனாகி உயிரிழந்தார். சிறுமி குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் நோய்வாய்ப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தனர். மாநில சுகாதாரத் துறையிடம் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.. பின்னர், கேக் ஆர்டர் செய்யப்பட்ட பேக்கரி பதிவு செய்யப்படாமல், போலி பெயரில் இயங்கி வந்தது தெரியவந்தது. 

தமிழ்நாட்டில் 100ல் ஒருவருக்கு மாரடைப்பு ஆபத்து! பெண்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

ஆர்டர் செய்த கேக் காலாவதியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூழலில் காலாவதியான சாக்லேட் சாப்பிட்டதால் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காலாதியான பொருட்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதற்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios