Asianet News TamilAsianet News Tamil

Fairness Cream : சரும அழகிற்காக பயன்படுத்தும் கிரீம்களால் சிறுநீரக பிரச்சனை ஏற்படும்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சரும அழகிற்காக பயன்படுத்தப்படும் அழகுசாதன கிரீம்களினால் சிறுநீரக பிரச்சனை ஏற்படக்கூடும் என அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

According to Study Use of Fairness Cream Leads to kidney problems in India gan
Author
First Published Apr 14, 2024, 3:48 PM IST

தற்போதைய காலகட்டத்தில் பெண்கள், ஆண்கள் என அனைவருமே தங்களை அழகாக காட்டிக் கொள்ள அதிகளவிலான அழகுசாதன பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். சன் கிரீம், ஸ்கின் கிரீம், பவுண்டேஷன் என எக்கச்சக்கமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி தங்களை அழகுபடுத்திக் கொள்கின்றனர். இந்த அழகு சாதன பொருட்களின் பின்னணியில் இருக்கும் ஆபத்து பற்றி ஒரு அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.

அதன்படி அதிகளவில் சருமத்திற்கான கிரீம்களை பயன்படுத்துவதால் சிறுநீரக பிரச்சனை ஏற்படும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அந்த கிரீம்களில் அதிகளவிலான மெர்குரி(பாதரசம்) இருப்பதனால் அது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் Membranous Nephropathy என்கிற நோய் பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

Membranous Nephropathy என்பது தன்னுடல் தாக்க நோயாகும், இதனால் சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டு சிறுநீரில் அதிகப்படியான புரதம் வெளியேறக்கூடுமாம். Membranous Nephropathy நோய் பாதிப்பு உள்ள 22 பேரை வைத்து இந்த ஆய்வை நடத்தி உள்ளனர். அதில் 15 பேருக்கு அரியவகை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர்களில் 13 பேர் சரும அழகிற்காக கிரீம்களை பயன்படுத்திய பின்னர் தான் தங்களுக்கு இந்த நோய் அரிகுறி வந்ததாக கூறி இருக்கின்றனர்.

இதே நிலை நீடித்தால் இது ஒரு பொது சுகாதார அபாயத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும், இதுபோன்ற பொருட்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். அழகுக்காக பயன்படுத்தும் பொருட்களில் இப்படி இரு ஆபத்து ஒளிந்திருப்பது பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios