Akshitha Engagement: விஜய் டிவி சீரியல் நடிகைக்கு... நடிகருடன் நடந்த நிச்சயதார்த்தம்! குவியும் வாழ்த்து!
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் நடிகைக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகை அக்ஷிதா, கன்னட மொழி சீரியலில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கினார்.தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான, 'அழகு' சீரியல் தான் இவர் நடித்த முதல் தொடர்.
இதன் பின்னர், சில கன்னட திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததால், திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். ஆனால் இவர் நடித்த படங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்ப்புகிடைக்காத நிலையில், மீண்டும் இவரது கவனம் சீரியல் மீது திரும்பியது.
அந்த வகையில் அக்ஷிதா, சன் டிவியில் ஒளிபரப்பான 'கண்ணான கண்ணே' என்கிற தொடரில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். தமிழில் ஒரு ரசிகர்கள் கூட்டத்தையே இந்த சீரியல் இவருக்கு பெற்று தந்தது.
இதை தொடர்ந்து, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்... 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை அக்ஷிதாவுக்கும் பெங்களூரை சேர்ந்த எக்சிகியூடிவ் புரடியூசர் மற்றும் நடிகர் ப்ரீதம் சுரேஷ் என்பவருக்கும் வெகு விமர்சியாக நிச்சயத்தார்கள் நடந்து முடிந்துள்ளது.
இவர்கள் இருவருமே தங்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை... இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டு இந்த மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.