Kishen Das : ‘முதல் நீ முடிவும் நீ’ பட ஹீரோவுக்கு நிச்சயதார்த்தம்.. தோழியை காதலித்து கரம்பிடிக்கும் கிஷன் தாஸ்
முதல் நீ முடிவும் நீ படத்தில் ஹீரோவாக நடித்த கிஷான் தாஸ், தன்னுடைய தோழியை காதலித்து தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
Kishen Das Engagement
இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸான படம் முதல் நீ முடிவும் நீ. பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் கிஷன் தாஸ் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்திருந்தார். இப்படம் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன.
meetha raghunath wedding photo
அதன்படி இப்படத்தில் ஹீரோயினாக நடித்த மீதா ரகுநாத், குட் நைட் படத்தில் நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்தார். அப்படமும் ஹிட் ஆனதை தொடர்ந்து சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட மீதா, திடீரென தன்னுடைய காதலனை திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் தான் மீதாவின் திருமணம் நடைபெற்றது. இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்... Ilaiyaraaja Biopic : ஏ.ஆர்.ரகுமானாக சிம்பு.. இளையராஜா பயோபிக்கில் வைரமுத்துவாக நடிக்கப்போவது இந்த மாஸ் நடிகரா?
kishen das engaged
மீதாவை போல் அவருக்கு ஜோடியாக முதல் நீ முடிவும் நீ படத்தில் நடித்த கிஷன் தாஸும் தற்போது திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார். அவர் தன்னுடைய தோழியை காதலித்து அவரை கரம்பிடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரது திருமண நிச்சயதார்த்தம் தற்போது நடந்து முடிந்துள்ளது. அந்த நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார் கிஷன் தாஸ்.
kishen das lover
அதில் சினிமா பாணியில் தன்னுடைய காதலிக்காக பாட்டுப் பாடி இம்பிரஸ் செய்திருக்கிறார் கிஷன் தாஸ். இவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கிஷன் தாஸின் இந்த சர்ப்ரைஸ் பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கிஷான் தாஸின் அம்மா பிருந்தா, சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... உலக திரைப்பட வரலாற்றில் புது முயற்சியாக...இரண்டு நாய்கள் மட்டுமே நடித்து வெளியாகும் திரைப்படம் 'கிளவர்'!