Lokesh Kanagaraj : கருங்காலி மாலை அணிவதற்கு காரணம் அந்த விபத்து தான்... லோகேஷ் கனகராஜ் சொன்ன ஷாக்கிங் தகவல்
கருங்காலி மாலையை பிரபலப்படுத்தியவர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் தான் அதனை அணிந்திருப்பதற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.
lokesh kanagaraj
தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய ஐந்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. அடுத்ததாக ரஜினியின் தலைவர் 171, கார்த்தியுடன் கைதி 2, சூர்யாவை வைத்து ரோலெக்ஸ், கமலின் விக்ரம் 2 என லோகேஷின் லைன் அப் நீண்டுகொண்டே செல்கிறது. இதனால் செம்ம பிசியான இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ்.
இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் சமீப காலமாக கலக்கி வருகிறார் லோகி. முதன்முதலில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கிளைமாக்ஸில் மட்டும் வந்து தலைகாட்டிச் சென்ற லோகேஷ் கனகராஜ், அண்மையில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதையடுத்து ஸ்ருதிஹாசன் இசையமைத்த இனிமேல் என்கிற சுயாதீன் இசை ஆல்பத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதுவும் ரொமாண்டிக் ஹீரோவாக லோகேஷ் நடித்ததை பார்த்து அனைவரும் வாயடைத்து போய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Holi 2024 : ரஜினி முதல் மாளவிகா மோகனன் வரை... ஜாலியாக ஹோலியை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் கலர்புல் போட்டோஸ்
இந்த நிலையில், ஸ்ருதிஹாசன் ஜோடியாக லோகேஷ் நடித்துள்ள இனிமேல் என்கிற ஆல்பம் பாடலை புரமோட் செய்யும் விதமாக புகழ்பெற்ற யூடியூப்பர்களான விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோருடன் ஒரு ஜாலியான நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ், அதில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கருங்காலி மாலை அணிருந்திருப்பதன் பின்னணி குறித்தும் அதில் பேசி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் கருங்காலி மாலை பேமஸ் ஆனதற்கு முக்கிய காரணம் இரண்டே பேர் தான். ஒருவர் தனுஷ், மற்றொருவர் லோகேஷ் கனகராஜ். இவர்களை பார்த்து தான் இளைஞர்கள் மத்தியில் கருங்காலி மாலை பிரபலமானது. ஆனால் அந்த மாலையை தான் எந்த ஒரு நம்பிக்கைக்காகவும் போடவில்லை என லோகி கூறி இருக்கிறார்.
ஒருமுறை விக்ரம் பட ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் போது விபத்தில் சிக்கினாராம் லோகி. அப்போது அவரது நண்பரான கலை இயக்குனர் சதீஷ் என்பவர் தான் கருங்காலி மாலையை வாங்கிக் கொடுத்து இதை அணிந்துகொள் இது உன்னை சுற்றியுள்ள நெகட்டிவிட்டியை குறைக்கும் என சொல்லி கொடுத்தாராம். நண்பன் ஆசையாக வாங்கிக் கொடுத்தது என்பதால் அதை அணிந்திருப்பதாகவும் மற்றபடி அதன் மீது தனக்கு நம்பிக்கை எதுவும் இல்லை என்றும் லோகேஷ் கனகராஜ் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... Indian Movie: 'இந்தியன்' படத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு பதில் முதலில் நடிக்க இருந்த டாப் ஹீரோயின் இவங்க தான்!