பாலிவுட் ஹீரோயின்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் உடையில் அட்லீ மனைவி பிரியா! குதூகல ரொமான்டிக் போட்டோஸ்!
இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியாவின், ரீசென்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் அட்லீ 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்த பின்னர், அட்லீயுடன் சேர்ந்து அவரது மனைவி பிரியாவும் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது கருப்பு நிற அல்ட்ரா மாடர்ன் உடை அணிந்து இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ், மிகவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பிரியாவுக்கு மேட்சிங்காக அட்லீயுடம் மிகவும் ட்ரெண்டியான உடையில் ஜொலிக்கிறார்.
அட்லீ ஒரு துணை இயக்குனராக இருந்த போதில் இருந்தே பிரியா அவரை காதலித்து வந்தார். அட்லீ இயக்கிய குறும்படங்களில் நடித்த போது தான், இருவருக்கும் இடையே காதல் உருவானதாக கூறப்பட்டது. பிரியா பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு, பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர் சுமார் 7 வருடங்களுக்கு மேல் குழந்தை இல்லாமல் இருந்த அட்லீ - பிரியா ஜோடிக்கு கடந்த ஆண்டு தான் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் தான் தங்களுடைய குழந்தையின் பிறந்த நாளை பாரிசில் இருவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதை தொடர்ந்து, போட்டோ ஷூட்டில் பிரியா அட்லீ அதிகம் ஆர்வம் காட்டி வரும் நிலையில், திரைப்படங்களில் நடிக்க துவங்குவாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் பலர் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.