Priya Anand : கொளுத்தும் வெப்பத்திலும்.. சில்லென்ற சில்வர் நிற ஆடையில் பிரியா ஆனந்த் - கூல் பிக்ஸ் இதோ!
Actress Priya Anand : சென்னையில் பிறந்த பிரபல நடிகை பிரியா ஆனந்த் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளை சரளமாக பேசும் திறன் கொண்டவர்.
Priya
சென்னையில் கடந்த 1987ம் ஆண்டு பிறந்த பிரபல நடிகை பிரியா ஆனந்த், சிறு வயது முதலையே திரைப்படத்தின் மீது கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான "வாமனன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
Actress Priya
தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அவர் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இணைய தொடர்களிலும் பிரியா ஆனந்த் நடித்து வருகின்றார்.
Priya Anand
அண்மையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லோகேஷ் கனகராஜின் "லியோ" திரைப்படத்தில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் கௌதம் வாசுதேவ் மேனனின் மனைவியாக அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Priya Anand Photos
தற்பொழுது தமிழில் டாப் ஸ்டார் பிரசாந்தின் "அந்தகன்" மற்றும் மிர்ச்சி சிவாவின் "சுமோ" ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை பிரியா ஆனந்த் கன்னட மொழியிலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.