Asianet News TamilAsianet News Tamil

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்த சூர்யா - கார்த்தி ரசிகர்கள்!

கஜா புயலில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்னை விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வர குறைந்தது பதினைந்து ஆண்டுகள் ஆகும் என்கின்றனர்.
 
surya and karthick fans help kaja affected agriculture peoples
Author
Chennai, First Published Jan 20, 2019, 6:35 PM IST

கஜா புயலில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்னை விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வர குறைந்தது பதினைந்து ஆண்டுகள் ஆகும் என்கின்றனர்.

தமிழ்த் திரையுலகில் இருந்து பல நடிகர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். மேலும்  நடிகர் சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ஐம்பது லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி விவசாயிகள் துயர் துடைக்கும் பணியைத் தொடங்கி வைத்தனர். அவர்களைத் தொடர்ந்து  அவர்களின் ரசிகர் மன்றத்தினர் நேரடியாக களத்தில் இறங்கினர். புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுடன் தங்கி தேவையான உதவிகளைச் செய்தனர்.

surya and karthick fans help kaja affected agriculture peoples

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செருவா விடுதி கிராமம் அருகே 'தண்டா குளத்துக்கரை' என்ற குக்கிராமத்தில் வசித்த 50 குடும்பங்கள் கஜா புயலில் தங்கள் வீடுகளை முற்றிலும் இழந்து விட்டனர். தலைமுறையாக அதே இடத்தில் வசித்தாலும் மின் இணைப்பு கூட இல்லாத வறுமையான சூழலில் வாழ்ந்த அந்த மக்களுக்கு மீண்டும் வீடு கட்டித் தரும் முயற்சியில் சூர்யா - கார்த்தி நற்பணி இயக்கத்தினர் இறங்கினர்.

surya and karthick fans help kaja affected agriculture peoples

நற்பணி இயக்கத் தலைவர் நேரடியாக சென்று அந்த இடத்தைப் பார்வையிட்டார். தென்னங்கீற்று வேய்ந்த கூரை வீடுகள் வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பணிகள்
தொடங்கப்பட்டன. பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பதினைந்து வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இரண்டு வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சூர்யா - கார்த்தி நற்பணி இயக்கத்தினர் தண்டா குளத்துக்கரை கிராமத்துக்கு நேரடியாக சென்று அந்த மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர். 

surya and karthick fans help kaja affected agriculture peoples

இந்த திட்டத்திற்கு செலவாகும் முழு தொகையையும் சூர்யா - கார்த்தி ரசிகர்களே முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இன்னும் ஒரு வார காலத்தில் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios