Asianet News TamilAsianet News Tamil

கம்மல் செடியான அசோலாவை தீவனமாக பயன்படுத்துவது நல்லது. ஏன்?

It is good to use the Azolla as a feeder. Why?
It is good to use the Azolla as a feeder. Why?
Author
First Published Dec 9, 2017, 12:55 PM IST


அசோலா

** தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என்று அழைக்கப்படுகிறது.

** பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம்.

** மிக மிக சிறிய இலையையும் துல்லியமான வேர்களையும் கொண்டவை. தண்டு மற்றும் வேர்பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும்.

** பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் இருக்கும்.

** வேகமாக வளரும் தன்மை கொண்டவை.

அசோலா- தீவனமாக

** அசோலாவில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அதிகம் உள்ளன.

** உலர்ந்த நிலையிலுள்ள அசோலாவில் புரத சத்து - 25-35 %, தாதுக்கள் - 10-15% மற்றும் அமினோ அமிலங்கள் - 7-10 % உள்ளன.

** அசோலாவின் செரிக்கும் தன்மை கால்நடைகளில் மிகவும் நன்றாக இருக்கிறது.

** அசோலாவை தனியாகவும் அல்லது அடர்தீவனத்துடன் கலந்தும் கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.

** செம்மறியாடுகள், வெள்ளாடுகள், பன்றிகள், கோழிகள் மற்றும் முயல்களுக்கும் தீவனமாக அளிக்கலாம்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios