comscore

உலகம்

chennai will drowning in sea reaction of amazon fire

சென்னை கடலுக்குள் மூழ்கப்போகிறது...? அமேசான் காடுகள் தொடரந்து எரிவதால் ஆபத்து...! சூழலியல் ஆய்வறிக்கைகளை காட்டி திகிலூட்டும் சீமான்...!

புவி வெப்பமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதால் கடல்நீர் மட்டம் உயர்வடைந்து உலகம் முழுக்கக் கடற்கரையோரப் பகுதிகள் யாவும் வரும் நூற்றாண்டில் பெரிய அழிவைச் சந்திக்கும் என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனால், லண்டன், நியூயார்க், ஷாங்காய், தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட உலகின் பெருநகரங்கள் தங்களது நிலப்பகுதியைக் கடற்கோளுக்கு இழந்து, இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக மாறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. நமது அண்டை நாடான வங்காளதேசம் 2100ஆம் ஆண்டு கடலில் மூழ்கி வாழ்வதற்குத் தகுதியற்ற நிலமாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2050ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் தங்கள் நாடு எதிர்கொள்ளப் போகும் சிக்கலை உணர்ந்து, அந்நாட்டின் நகரான ஜகார்த்தாவிலுள்ள தலைநகரை மாற்ற முடிவெடுத்துள்ளது இந்தோனேசியா.