world
வங்கதேசத்தில் போராட்டங்களைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டதாகவும், ராணுவ ஹெலிகாப்டரில் இந்தியா வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஷேக் ஹசீனா செப்டம்பர் 28, 1947 இல் பிறந்தார். அவரது தந்தை வங்கதேசத்தின் நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மான்.
ஷேக் ஹசீனா அரசியலுக்கு வர விரும்பவில்லை. 1966 ஆம் ஆண்டு ஈடன் மகளிர் கல்லூரியில் படிக்கும் போது அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது.
1975 ஆம் ஆண்டு வங்கதேச ராணுவக் கிளர்ச்சியின் போது, ஷேக் ஹசீனாவின் தாய், தந்தை மற்றும் மூன்று சகோதரர்கள் கொல்லப்பட்டனர்.
தனது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கொல்லப்பட்ட பிறகு, ஷேக் ஹசீனா சிறிது காலம் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
1981 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
1991-ம் ஆண்டு வங்கதேசத்தில் முதல் சுதந்திரத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தோல்வியடைந்தது.1996 தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார்.
ஷேக் ஹசீனா முதன்முதலில் 1975 ஆம் ஆண்டு தனது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து உயிர் தப்பினார்.