world

பண்டைய வரலாற்றில் தீர்க்கப்படாத 10 மர்மங்கள்!

கிஸா பிரமிடு ( Pyramids of Giza)

எகிப்தின் மிகப்பெரிய கிஸா பிரமிடு 4,500 ஆண்டுகளுக்கு முன்பு எந்த தொழில்நுட்ப உதவியும் இன்றி எப்படி கட்டப்பட்டது என்பது இன்று வரை புரியாத புதிராக உள்ளது.

நாஸ்கா கோடுகள் ( The Nazca lines)

2000 ஆண்டுகளுக்கு முன்பு பெருவின் பாலைவனத்தில் பொறிக்கப்பட்ட மாபெரும் பண்டைய நாஸ்கா கோடுகளின் நோக்கம் என்ன?

ஸ்டோன்ஹென்ஞ் (Stonehenge)

வரலாற்றுக்கு முந்தைய நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான காரணம் என்ன, இதனை உருவாக்கியவர்கள் மிகப்பெரிய கற்களை எவ்வாறு கொண்டு சென்று அமைத்தனர் என்பதற்கு இன்றும் விடை கிடைக்கவில்லை

மோயி கற்சிலைகள் (Moai)

பண்டைய பாலினேசிய மக்கள் எப்படி இந்த 887 மாபெரும் கல் சிலைகளை எந்த வித தொழில்நுட்ப உதவியும் இன்றி நிறுவினர்?

ஆன்டிகைதெரா பொறிமுறை (Antikythera mechanism)

உலகின் முதல் அனலாக் கணினியாக கருதப்படும் சிக்கலான, பண்டைய கிரேக்க சாதனத்தின் நோக்கம் என்ன

வாய்னிச் கையெழுத்துப் பிரதி (Voynich manuscript)

தெரியாத மொழி மற்றும் எழுத்துக்களில் எழுதப்பட்ட மர்மமான, விளக்கப்பட கையெழுத்துப் பிரதியின் அர்த்தம் என்ன?

ஸ்பிங்ஸ் (The sphinx)

பிரமாண்டமான, புதிரான சிலையின் உண்மையான நோக்கம் என்ன? அதைக் கட்டியவர் யார்?

சிந்து சமவெளி நாகரிகம் ( The Indus valley civilization)

இன்றைய இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஒரு காலத்தில் செழித்தோங்கியிருந்த அதிநவீன மற்றும் பண்டைய நாகரிகங்களின் வீழ்ச்சிக்கும் மறைவுக்கும் வழிவகுத்தவர் யார்?

பாக்தாத் பேட்டரி (Baghdad Battery)

ஒரு களிமண் ஜாடி, செப்பு சிலிண்டர் மற்றும் இரும்பு கம்பி ஆகியவற்றைக் கொண்ட 2000 ஆண்டுகள் பழமையான சாதனத்தின் பயன் என்ன?

உடன்படிக்கை பேழை (The arc of covenant)

பத்துக் கட்டளைகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் பண்டைய மதக் கலைப்பொருளுக்கு என்ன நடந்தது, அது இன்றும் எங்காவது மறைக்கப்பட்டுள்ளதா?

Find Next One