world

உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்.

புவி ஈர்ப்பு வேலை செய்யாத இடம் உலகில் இல்லை. ஆனால் புவி ஈ ர்ப்பு திடீரென வேலை செய்வதை நிறுத்திவிட்டால், நம் அனைவருக்கும் என்ன நடக்கும்?

Image credits: Getty

தலைகீழ் நீர்வீழ்ச்சி - இந்தியா

இது ஒரு மர்மமான தலைகீழ் நீர்வீழ்ச்சி. இது மகாராஷ்டிராவில் சிங்ககாட் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கீழே விழுவதற்கு பதில் மேல் நோக்கி செல்கிறது.

Image credits: google

அரகடா மலை - துருக்கி

துருக்கியில் உள்ள அரகடா மலை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது, ஏனெனில் அங்கு காரை நிறுத்தி வைத்திருந்தால், தானாகவே கார் முன்னோக்கி நகரும்.

Image credits: Getty

சாண்டா குரூஸ் மர்ம இடம் - அமெரிக்கா

அமெரிக்காவின் மிகவும் பிரபலமான ரகசிய இடங்களில் ஒன்று. அங்கு மக்கள் சாய்வான பாணியில் நடப்பது போல் இருக்கும். அங்கு தண்ணீரை கீழே ஊற்றினால், தரையில் விழாமல் மேலும் செல்லும்.

Image credits: Getty

ஹூவர் அணை - அமெரிக்கா

ஹூவர் அணை அமெரிக்காவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த இடத்தில் இருந்து தண்ணீரை கீழே ஊற்றினால், தண்ணீர் கீழே செல்வதற்குப் பதிலாக மேல்நோக்கி செல்லும்

 

Image credits: google

ஸ்பூக் ஹில் - புளோரிடா

ஸ்பூக் ஹில் என்பது ஈர்ப்பு விசை மலையாகும். இந்த இடத்தில் உங்கள் வாகனத்தை நிறுத்தினால், அது மலையை நோக்கி இழுக்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம்.

Image credits: google

செயின்ட் இக்னேஸ் மர்ம இடம் - அமெரிக்கா

1950 ஆம் ஆண்டு சில சர்வேயர்கள் இந்த இடத்தைத் தேடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் புவி ஈர்ப்பு விசை வேலை செய்யவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Image credits: google

ஜெஜு மர்ம சாலை - தென் கொரியா

தென் கொரியாவில் உள்ள, ஜெஜு மர்ம சாலை மேல்நோக்கி சாய்வது போல் இருக்கும். அந்த சாலையில் செல்லும் போது படிப்படியாக உயரம் அதிகரித்து வருவதாக தோன்றும். 

Image credits: google

காந்த மலை - ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த காந்த மலை பகுதியில் வாகனத்தை நிறுத்தினால், வாகனம் தானாகவே எதிர்திசையில் நகரும்.

Image credits: google

காந்த மலை இந்தியா

இந்தியாவின் லடாக்கில் உள்ள இந்த மலையானது மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் இழுக்கும் காந்த சக்தியைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Image credits: google