இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கத்தால் வன்முறை வெடித்ததை அடுத்து ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.
Tamil
சுதந்திரம் அளித்த தந்தையின் சிலை
ஆளும் அவாமி லீக் கட்சியின் சில தலைவர்களை கும்பல் தாக்கியதுடன், பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்தனர். வங்கதேசத்தை உருவாக்கிய முஜிபுர் ரஹ்மானின் சிலையை சம்மட்டியால் உடைத்தனர்.
Tamil
வங்கதேசத்தின் 'தந்தை' சிலை
வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான். 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட வங்கதேசத்தை பாகிஸ்தானிலிருந்து பிரித்து புதிய நாடாக உருவாக்கினார்.
Tamil
வங்கதேசத்தின் சுதந்திரத்திற்காக
ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபுர் ரஹ்மான். வங்கதேசம் உருவான பிறகு அவர் முதல் ஜனாதிபதியானார். 1971 முதல் 1975 வரை வங்கதேசத்தின் பிரதமராகவும் இருந்தார்.
Tamil
1975 ஆகஸ்டில் முஜிபுர் ரஹ்மான்
வங்கதேசம் உருவான சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் 15, 1975 அன்று, ஒரு ராணுவ சதித்திட்டத்தின் போது ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டார்.
Tamil
தந்தையின் படுகொலைக்குப் பிறகு
தந்தையின் படுகொலைக்குப் பின் ஷேக் ஹசீனாவுக்கு டெல்லியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அடைக்கலம் கொடுத்தார். 1975 முதல் 1981 வரை இந்தியாவில் தங்கி பின்னர் வங்கதேசம் சென்றார்.
Tamil
இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டம்
கடந்த 2 மாதங்களாக வங்கதேசத்தில் இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டு, அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து வருகின்றனர்.
Tamil
வங்கதேசத்தில் வன்முறை
வங்கதேசத்தில் நடந்த வன்முறையில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாட்டை நாங்கள் ஆட்சி செய்வோம் என்று வங்கதேச ராணுவத் தலைவர் கூறியுள்ளார்.