நம்மை சந்தோஷமாக உணர வைக்கும் ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க உதவும் 10 உணவுகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
டோபமைன், செரோடோனின், ஆக்ஸிடாஸின், என்டார்ஃபின்கள் போன்றவைதான் நம்மை சந்தோஷமாக உணர வைக்கும் ஹார்மோன்கள்.
சால்மன், மத்தி போன்ற மீன்களைச் சாப்பிடுவது ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க உதவும். இவை மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்தும்.
முட்டையில் 'டிரிப்டோபான்' என்ற அமினோ அமிலம் உள்ளது. செரோடோனின் உற்பத்திக்கு இந்த அமிலம் உடலுக்குத் தேவைப்படுகிறது.
ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது, ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க உதவும். அந்த உணவுகள் எவை என்று இனி பார்க்கலாம்.
ஓட்ஸ் சாப்பிடுவதும் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க நல்லது. இதில் உள்ள கார்போஹைட்ரேட், மூளையில் டிரிப்டோபான் கிடைப்பதை அதிகரிக்க உதவும்.
நட்ஸ் மற்றும் விதைகளில் டிரிப்டோபான், ஆரோக்கியமான கொழுப்புகள், மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இவற்றைச் சாப்பிடுவதும் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கச் சிறந்த வழி.
அன்னாசிப்பழத்தில் அதிக அளவில் டிரிப்டோபான் உள்ளது. இது மூளையில் செரோடோனினாக மாற்றப்படுகிறது.
வாழைப்பழத்தில் டிரிப்டோபான் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை அதிகமாக உள்ளன. வாழைப்பழம் சாப்பிடுவது மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் நல்லது.
டார்க் சாக்லேட்டில் உள்ள ஃபிளவனாய்டுகள் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மகிழ்ச்சியான உணர்வைத் தருகின்றன.
அவகேடோவில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், பெண்களின் பதற்றத்தைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் வைட்டமின் பி சத்தும் உள்ளது.
பெர்ரி பழங்களைச் சாப்பிடுவது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
காபியில் உள்ள காஃபின், மூளையில் டோபமைன் மற்றும் நோர்பைன்ப்ரைன் போன்ற சில ரசாயனங்களின் அளவை அதிகரிக்கும்.