விடுமுறை என்றாலே மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான், அந்த வகையில் அரையாண்டு தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைபெற்று வருகிறது
Image credits: our own
பள்ளிகளுக்கு விடுமுறை
அரையாண்டு தேர்வுகள் இன்று அல்லது நாளையோடு முடிவடைந்து பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்படவுள்ளது. ஜனவரி 2 அல்லது 3 ஆம் தேதிகளில் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
Image credits: our own
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழாவானது உற்சாகமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக கிறிஸ்துவ மக்கள் வீடுகளில் அலங்கார குடில்களை அமைத்துள்ளனர்.
Image credits: Getty
கிறிஸ்துமஸ் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. டிசம்பர் 24ஆம் தேதி ஒரு நாள் முன்னதாக பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Image credits: pinterest
மாற்று பணி நாள்
டிசம்பர் 24ஆம் தேதி விடுமுறை காரணமாக ஈடு செய்யும் வகையில் டிசம்பர் 28ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
Image credits: our own
விடுமுறை கொண்டாட்டம்
கல்வி நிலையங்களுக்கு மட்டுமில்லாமல் அரசு அலுவலங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து கொண்டாடி வருகின்றனர்.