சச்சின் vs விராட் கோலி: சொத்து மதிப்பில் 'கிங்' யார்?
சச்சின் மற்றும் கோலி எனும் பெரும் ஜாம்பவான்கள்
'கிரிக்கெட் கடவுள்' எனப்படும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் 'கிங்' என அழைக்கப்படும் விராட் கோலி கிரிக்கெடில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளனர்.
சச்சின் vs கோலி: ஒப்பிடும் ரசிகர்கள்
சச்சின் டெண்டுல்கரை பின்பற்றி பல சாதனைகளை விராட் கோலி படைத்து வருவதால் இருவரையும் ரசிகர்கள் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.
அதிக ரன்கள் குவித்தது யார்?
சச்சின் டெண்டுல்கர் 666 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34,357 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி 542 சர்வதேச போட்டிகளில் விளையாடி 30,000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார்.
சம்பாதிப்பதிலும் இருவரும் 'கிங்'
விராட் மற்றும் சச்சின் இருவருமே சம்பாதிப்பதிலும் 'கிங்' ஆக திகழ்கின்றனர். பல்வேறு முன்னணி பிராண்ட்களின் ஒப்பந்தம் மூலம் இருவரும் வருமானம் ஈட்டி வருகிறனர்.
கோலியின் சொத்து மதிப்பு என்ன?
விராட் கோலியின் நிகர மதிப்பு ரூ.1,050 கோடி என தகவல்கள் கூறுகின்றன. பிராண்ட் ஒப்பந்தங்கள், சமூக ஊடகங்கள், வணிக முயற்சிகள் மற்றும் ரியல் எஸ்டேட் மூலம் அவருக்கு வருமானம் வருகிறது.
சச்சினின் சொத்து மதிப்பு என்ன?
சச்சினின் நிகர சொத்து மதிப்பு ரூ.1,400 கோடி என கூறப்படுகிறது. ஓய்வு பெற்றபின்பும் பிராண்ட் ஒப்பந்தங்கள், ஐபிஓ முதலீடுகளில் இருந்து அவர் வருமானம் ஈட்டி வருகிறார்
ரசிகர்கள் பலம் யாருக்கு அதிகம்?
ரசிகர்கள் பலத்திலும் கோலி மற்றும் சச்சின் முன்னணியில் உள்ளனர். கோலியை இன்ஸ்டாகிராமில் 270 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். சச்சினை 49.9 மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள்.