sports

Top 10 Richest Cricketers: தோனி, விராட் இல்லை; அப்படின்னா யாரு!!

Image credits: instagram

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் உலகின் மிகவும் பணக்கார கிரிக்கெட் வீரர். அவரது சொத்து மதிப்பு 1425 கோடி ரூபாய்.

மகேந்திர சிங் தோனி

இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 9,30 கோடி ரூபாய்.

விராட் கோலி

இந்தியாவின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 771 கோடி ரூபாய்.

ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங் நான்காவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 587 கோடி ரூபாய்..

பிரையன் லாரா

வெஸ்ட் இண்டீஸின் பேட்ஸ்மேன் பிரையன் லாரா 503 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சொந்தக்காரர்.

ஷேன் வோர்ன்

ஆஸ்திரேலியாவின் சிறந்த லெக் ஸ்பின்னர் ஷேன் வோர்ன் 419 கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்டுள்ளார். அவர் கிரிக்கெட் வர்ணனை மற்றும் பயிற்சியிலிருந்தும் பணம் சம்பாதித்துள்ளார்.

ஜாக் காலிஸ்

தென்னாப்பிரிக்காவின் சிறந்த ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸின் மொத்த சொத்து மதிப்பு 402 கோடி ரூபாய். பயிற்சியின் மூலமும் நல்ல பணம் சம்பாதித்து வருகிறார்.

வீரேந்திர சேவாக்

இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் 335 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபராக இருக்கிறார். விளம்பரங்கள் மூலம் அவருக்கு நல்ல வருமானம் வருகிறது.

ஷேன் வாட்சன்

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனின் சொத்து மதிப்பு 335 கோடி ரூபாய். கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் ஆய்வாளராகவும் நல்ல வருமானம் ஈட்டியுள்ளார்.

யுவராஜ் சிங்

இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததற்காக பிரபலமான யுவராஜ் சிங்கின் சொத்து மதிப்பு 293 கோடி ரூபாய்.

Find Next One