ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் கிரிக்கெட்டின் பெருமை. அவர் தனது பேட்டிங்கால் கிரிக்கெட் மைதானத்தில் அற்புதமான சாதனைகளைப் படைத்துள்ளார்.
ஸ்மிருதியின் சாதனைகள்
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். அதில் 5 சாதனைகளைப் பற்றி பார்ப்போம்.
ஒருநாள் போட்டியில் 10 சதங்கள்
ஸ்மிருதி மந்தனா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த பெண் வீராங்கனை. இவர் இதுவரை 10 சதங்கள் அடித்துள்ளார்.
ஓராண்டில் அதிக சதங்கள்
ஒரு வருடத்தில் அதிக சதங்கள் அடித்த சாதனையும் இவரது பெயரில் உள்ளது. 2024ல் ஸ்மிருதி 4 சதங்கள் அடித்தார்.
10 இன்னிங்ஸ்களில் 50
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 10 இன்னிங்ஸ்களில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த ஒரே கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மட்டும் தான்.
ஐசிசி விருது பெற்றவர்
ஸ்மிருதி மந்தனா இரண்டு முறை ஐசிசி ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார். இந்த ஆண்டும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
பிசிசிஐ 'நமன் விருது 2025'
சில நாட்களுக்கு முன்பு இவருக்கு சிறப்பாக விளையாடிதற்காக பிசிசிஐ நமன் விருது வழங்கி கெளரவித்தது. மேலும் ஆசிய விளையாட்டு 2023லும் ஸ்மிருதி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.