sports

நாயகர்களாக ஜொலித்த வீரர்கள்

திரைப்படங்களில் தங்கள் நடிப்புத் திறனை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்களைப் பற்றி நாம் இன்று பார்க்கலாம்.

ஹர்பஜன் சிங்

இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் பிரண்ட்ஷிப், டிக்கிலோனா ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் Savior என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். 

அனில் கும்பிளே

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே, அனுபம் கெர் மற்றும் மந்திரா பேடி நடித்த 'மீராபாய் நாட் அவுட்' படத்தில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.

அஜய் ஜடேஜா

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அஜய் ஜடேஜா, 'கேல்' மற்றும் 'பல் பல் தில் கே சாத்' போன்ற படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்புத்திறனுக்கு பாராட்டுகளும் குவிந்தன.

பிரட் லீ

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ, இந்திய-ஆஸ்திரேலிய திரைப்படமான 'அன்இந்தியன்' படத்தில் நடித்துள்ளார். ஆஷா போஸ்லேயின் 'கியா தும் மேரே ஹோ' பாடலிலும் நடித்துள்ளார்.

சந்தீப் பாட்டில்

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சந்தீப் பாட்டில், புகழ்பெற்ற நடிகை பூனம் தில்லனுடன் 'கபி அஜ்னபி தே' படத்தில் நடித்துள்ளார். இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

சுனில் கவாஸ்கர்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மராத்தி மொழியின் 'சாவ்லி பிரேமாச்சி' படத்தில் நடித்துள்ளார். நசிருதீன் ஷா படத்திலும் சில காட்சிகள் தோன்றியுள்ளார்.

சடகோபன் ரமேஷ்

சந்தோஷ் சுப்பிரமணியம், போட்டா போட்டி படங்களில் சடகோபன் ரமேஷ் நடித்துள்ளார். இவர் நடித்து 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள 'மத கஜ ராஜா' வெற்றி நடை போடுவது குறிப்பிடத்தக்கது. 

Image credits: google

எல்லா ஏரியாலயும் நாங்க கிங்: சினிமாவில் ஜொலித்த கிரிக்கெட் வீரர்கள்

பும்ரா vs அக்ரம்: ஒருநாள் போட்டிகளில் யார் 'கிங்'?

மகா ராணியாக வாழும் ஸ்மிருதி மந்தனா: இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?

கோலி மட்டுல்ல; இந்த 3 வீரர்களும் ஆர்சிபி கேப்டன் ரேஸில் போட்டி!