Cricket
துலீப் டிராபியில் அற்புதமாக மின்னியும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. மீண்டும் ஏமாற்றமே மிஞ்சிய வீரர்கள் பட்டியலில் முதல்-7 இடத்தில் உள்ளனர்.
இந்தியா டி அணிக்காக முதல் இன்னிங்ஸில் ஏமாற்றமளித்த ஷ்ரேயாஸ் ஐயர், இரண்டாவது இன்னிங்ஸில் 44 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தும் அணியில் இடம் பிடிக்கவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடிய தேவ்தத் படிக்கல் முதல் இன்னிங்ஸில் ஏமாற்றமளித்தாலும், 2ஆவது இன்னிங்ஸில் 56 ரன்கள் எடுத்தும் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கவில்லை.
துலீப் டிராபியில் இந்தியா பி அணிக்காக முதல் இன்னிங்ஸில் 181 ரன்கள் எடுத்தும் இளம் வீரர் முஷீர் கானுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.
பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட நவ்தீப் சைனி டெஸ்ட் அணிக்கு திரும்ப முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் எடுத்ததோடு, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இந்தியா டி அணிக்காக முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷித் ராணாவுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஒரு இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் உட்பட மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதாருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.