spiritual
உலகிலே நீளமான சுவர் என்றால் சீனப் பெருஞ்சுவர் தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்தியாவும் அதற்கு சளைத்தது இல்லை தெரியுமா?
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் 5ஆம் நூற்றாண்டில் கட்டியெழுப்பட்ட நீளமான சுவராகும்.
உலகின் இரண்டாவது நீளமான சுவரை கொண்டுள்ள பெருமை இந்தியாவை தான் சேரும். இது பலரும் அறியாத வரலாற்று உண்மை.
பல வரலாற்று சின்னங்களை கொண்டுள்ள ராஜஸ்தானில் தான் உலகின் இரண்டாவது நீளமான சுவர் உள்ளது.
ராஜஸ்தான் கும்பல்கர் கோட்டைக்கு சென்றால், அங்கு அஜய்கர் என்ற கோட்டையை சூழ்ந்திருக்கும், உலகின் இரண்டாவது பெருஞ்சுவரை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
இந்த பெருஞ்சுவரின் நீளம் 36 கி.மீ தொலைவு இருக்கும். பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கும்.
உலகில் இரண்டாவது நீளமான இந்த சுற்றுச்சுவரின் தடிமன் 15 முதல் 25 அடியாக விரிந்திருக்கும்.
வெறும் சுற்றுச்சுவர் அல்ல. கிட்டத்தட்ட 360 கோயில்களுக்கு இந்த சுவர் அரணாக அமைந்துள்ளது.
ராஜஸ்தானின் இந்த நீளமான சுவருக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இந்த கோட்டை சுவரில் அக்பர் தன் அதிகாரத்தை நிலைநாட்ட பலமுறை ஊடுருவ முயன்றார். ஆனால் தோல்வியை தழுவினார்.
வெள்ளி மோதிரம் அணிந்தால் நன்மைகள் இவ்வளவும் கிடைக்குமா?
Today Rasipalan 11th May 2023 | இன்றைய ராசிபலன்
Today Rasipalan 10th May 2023: அதிர்ஷ்டம்னா என்னனு இன்று தெரியும்..!
Today Rasipalan 9th May 2023: பல வழிகளில் பணம் கொட்டும்..!