Tamil

மேஷம்

ஸ்பெஷலான டாஸ்க்குகளை இன்று செய்து முடிப்பீர்கள். இளைஞர்கள் அவர்களது இலக்குகளை அடைய கடுமையாக முயற்சி செய்வார்கள். தொழிலில் ஊழியர்களால் சிறு தடங்கல் ஏற்படலாம்.
 

Tamil

ரிஷபம்

பொருளாதார சூழல் மேம்படும். ஆதாயம் தரும் பயணங்கள் மேற்கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் திருப்தி அடையமாட்டார்கள். கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். 
 

Image credits: Getty
Tamil

மிதுனம்

எதிர்காலத்தில் ஆதாயம் தரக்கூடிய முக்கியமான முடிவை எடுப்பீர்கள். தொழிலில் நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தை உயர்த்துங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 
 

Image credits: Getty
Tamil

கடகம்

யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மீறினால் பிரச்னையை சந்திக்க நேரிடும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உடல் எடையை அதிகரிக்க விடாமல் பார்த்துக்கொள்ளவும். 
 

Image credits: Getty
Tamil

சிம்மம்

நெருக்கமான உறவினர்களுக்கு இக்கட்டான சூழலில் உதவுவதன் மூலம் சிறப்பாக உணர்வீர்கள். தவறான நகர்வுகளில் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
 

Image credits: Getty
Tamil

கன்னி

மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நெகட்டிவான நபர்களிடமிருந்து விலகி இருக்கவும். ஆன்மீகம், தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.
 

Image credits: Getty
Tamil

துலாம்

இன்றைய தினம் இனிதாய் தொடங்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

Image credits: Getty
Tamil

விருச்சிகம்

குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிப்பீர்கள். பேசும்போது தகாத வார்த்தைகளை பயன்படுத்திவிட வேண்டாம். தொழிலில் ஆதாயம் கிடைக்கும் வகையிலான வழிகாட்டுதல் கிடைக்கும்.
 

Image credits: Getty
Tamil

தனுசு

வீட்டு பராமரிப்பு வேலைகளுக்கு அதிகம் செலவு செய்வீர்கள். அது உங்கள் பட்ஜெட்டை பாதிக்கும். நெருங்கிய நபருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். 
 

Image credits: Getty
Tamil

மகரம்

இன்று புதிய வெற்றி கிடைக்கும். உங்கள் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க தொடங்குவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் சவால்கள் ஏற்படும்.
 

Image credits: Getty
Tamil

கும்பம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் முக்கியமான வேலையை செய்து முடிப்பீர்கள். அதனால் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள்.
 

Image credits: Getty
Tamil

மீனம்

நெருக்கமானவர்களே உங்களுக்கு எதிராக திட்டங்களை தீட்டுவார்கள். எனவே கவனமாக இருக்கவும். கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும். ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படலாம்.
 

Image credits: Getty

May 25th, 2023 | இன்றைய ராசிபலன் : இன்று தடைகளை தகர்த்தெரியும் ராசிகள்

Today Rasipalan 24th May 2023: சொத்து பிரச்னை சுமூகமாக முடியும்..!

வழியில் கிடக்கும் பணத்தை எடுப்பது நல்லதா? கெட்டதா?

வாஸ்துபடி வடக்கு திசைல இதை வைக்காதீங்க! மீறினால் நிதி நெருக்கடி வரும்