spiritual
கடவுளின் பூமி என சொல்லப்படும் உத்திரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது பத்ரிநாத் கோயில். இங்கு விஷ்ணு வீற்றிருக்கிறார்.
கேதர்நாத், பத்ரிநாத், அமர்நாத், கைலாஷ் மானசரோவர் போன்றவை இமயமலைத் தொடரில் இருக்கும் புண்ணிய தலங்கள்.
பத்ரிநாத் கோயில் 3,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பனி மலைகள் சூழ்ந்துள்ள இக்கோயில், தீவிர பனிப்பொழிவு காரணமாக 6 மாதங்கள் மூடியே இருக்கும்.
பாகவத புராணம், ஸ்கந்த புராணம், மகாபாரதம் ஆகிய புனித நூல்களில் பத்ரிநாத் கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஷ்ணு பகவான் பத்ரி மரத்தின் கீழ் தியானம் செய்ததாகவும், அதனால் அந்த இடத்திற்கு பத்ரிநாத் என்ற பெயர் வந்ததாகவும் புனித நூல்கள் கூறுகிறது.
பத்ரிநாத்தின் வரலாற்று குறிப்புகள் 8 ஆம் நூற்றாண்டு வரை அது பௌத்த ஆலயமாக இருந்ததாகக் கூறுகிறது. ஆதி சங்கரர் அதை இந்து கோவிலாக மாற்றினாராம்.
பத்ரிநாத் கோயிலின் கட்டிடக்கலை பௌத்த கோயிலை ஒத்திருக்கும். பத்ரிநாத் கோயில் சிற்பம் கடவுள்களால் நிறுவப்பட்டது என்பது நம்பிக்கை. இது பௌத்தர்களால் அலக்நந்தா ஆற்றில் வீசப்பட்டது.
நதியில் இருந்து சிலைகளை மீட்ட ஆதி சங்கரர், அதை தப்ட் குண்ட் வெந்நீர் ஊற்றுக்கு அருகில் குகையில் பதித்தார். இதை ராமானுஜாச்சாரியார் எடுத்து வந்து பத்ரிநாத் கோயிலில் நிறுவினார்.
பத்ரிநாத் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், இந்தூர் ராணி கோயிலுக்குச் சென்றபோது தங்கக் குடையை வழங்கினார்.
கர்வால் 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. பத்ரிநாத் கோயில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது. ஆனாலும், நிர்வாகக் குழு கர்வால் மன்னர் தலைமையில் இருந்தது.