கொஞ்சமாக காபி தூளை எடுத்து, சின்ன சின்ன பாத்திரங்களில் வையுங்கள். அதை வீட்டின் பல பகுதிகளில் திறந்து வைத்தால், காபி தூளின் வாசனை வீட்டில் இருந்து கொசுக்களை விரட்டிவிடும்.
Image credits: Getty
Tamil
வேப்பிலை
வேப்பிலை கொண்டும் கொசுக்களை விரட்டலாம். வேப்பிலையை போட்டு காய்ச்சிய எண்ணெயை உடலில் தடவினால் போதும். இப்படி செய்தால், கொசுக்கள் உங்களை கடிபப்தை தவிர்க்கலாம்.
Image credits: Instagram
Tamil
பப்பாளி இலை
பப்பாளி இலையில் இருந்து சாறு எடுங்கள். அந்த சாற்றை, கொசு லார்வாக்கள் இருக்கும் தண்ணீரில் ஊற்றினால் போதும். லார்வாக்கள் அனைத்தும் அழிந்துவிடும்.
Image credits: social media
Tamil
கற்பூரம்
கற்பூரத்தை வைத்தும் கொசுக்களை விரட்டலாம். இதற்கு, கற்பூரத்தை ஏற்றி புகை போட்டால் போதும். இது ஓரளவிற்கு கொசுக்களை வீட்டிலிருந்து விரட்ட உதவும்.
Image credits: Freepik
Tamil
துளசி, ரோஸ்மேரி
துளசி, ரோஸ்மேரி, வேப்பிலை போன்ற செடிகள் கொசுக்களை விரட்டும். இந்தச் செடிகளை வீட்டைச் சுற்றி நட்டு வளர்த்தால் கொசுக்கள் வருவது குறையும்.
Image credits: instagram
Tamil
பூண்டு
பூண்டை நன்றாக நசுக்கி, தண்ணீரில் போட்டு சூடாக்குங்கள். பிறகு அந்த நீரை அறையில் தெளித்தால், கொசுத் தொல்லை நீங்கும்.
Image credits: Getty
Tamil
எலுமிச்சை
ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதில் கிராம்புகளைச் செருகி வையுங்கள். இதை கதவுகள், ஜன்னல்கள் அருகே வைத்தால் கொசுக்கள் உள்ளே வராது.