life-style
வயிற்று வலி மற்றும் முதுகு வலி ஆகியவை பொதுவான மாதவிடாய் பிரச்சனைகள். ஆனால் மாதவிடாய்க்கு முன்பு மலச்சிக்கல் பெரும்பாலான பெண்களை பாதிக்கிறது.
மாதவிடாய்க்கு முன் மலச்சிக்கலுக்கான சில காரணங்கள் பார்க்கலாம்.
ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் மலச்சிக்கல் ஏற்படலாம். progesterone அதிகரித்து குடலின் இயக்கத்தை குறைத்து விடுகிறது.
மாதவிடாய்க்கு முன் உடல் prostaglandin உற்பத்தி செய்கிறது. இது கருப்பை சுருங்க உதவுகிறது. இது குடல் இயக்கங்களை மெதுவாக்கி மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது.
மாதவிடாய்க்கு முன் உப்பு, சர்க்கரை அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடத் தூண்டும். இவை மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். அதிகமான நார்ச்சத்து பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும்.
மாதவிடாய் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை அதிகரிக்கும். இதுவும் மலச்சிக்கலுக்கான முக்கிய காரணம்.
சில பெண்கள் ரத்த சோகையைத் தடுக்க இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இரும்புச்சத்து மாத்திரைகள் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.