ஏன் சீன மக்கள் இந்தியாவில் இருந்து கழுதை தோலை கடத்துகின்றனர்?
life-style Oct 15 2024
Author: Dhanalakshmi G Image Credits:Social Media
Tamil
ராஜஸ்தான்
ராஜஸ்தான் உட்பட 6 மாநில கழுதைகள் சீனாவிற்கு கடத்தப்படுகின்றன. இங்கிலாந்து ஆய்வமைப்பான புரூக் இந்தியாவின் ஆய்வறிக்கையில் இது தெரியவந்துள்ளது.
Tamil
ஆண்மையை அதிகரிக்குமா?
கழுதைத் தோல் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கவும், பெண்களின் அழகை மேம்படுத்தவும் பயன்படுகிறது என ஒரு அறிக்கை கூறுகிறது.
Tamil
கழுதைத் தோலில் இருந்து மருந்து
சீனாவின் அழகு சாதன மற்றும் மருந்து தயாரிப்பு தொழிலில் கழுதைத் தோல் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே கழுதைகள் கடத்தல் அதிகரித்துள்ளது.
Tamil
கழுதைகள் மாயம்
ஜெய்ப்பூரில் நடைபெற்ற நான்கு நாள் கழுதை சந்தையில் 15 கழுதைகள் மட்டுமே வந்தன. வழக்கமாக 25000க்கும் மேற்பட்ட கழுதைகள் விற்பனைக்கு வருமாம்.
Tamil
வெளிநாட்டுக் கழுதைகள்
ராஜஸ்தானின் கால்நடைத் துறை இதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லடாக், ஆப்கானிஸ்தான், காத்மாண்டு, சிந்து, பஞ்சாப், குஜராத் போன்ற இடங்களில் இருந்து கழுதைகள் வரும்.
Tamil
சீன அழகுசாதனத் தொழில்
சீனாவின் அழகுசாதன தயாரிப்புக்கு இந்தியா உட்பட பிற நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக கழுதைகள் சீனாவிற்கு கடத்தப்படுகின்றன.