பஃப் மற்றும் பெரிய கை வைத்த பிளவுஸ், கவுன்கள் இந்த சீசன் ஸ்பெஷல். இது குழந்தைகளுக்கு விண்டேஜ் தோற்றத்தையும் கம்பீரமான அழகையும் தரும்.
Image credits: Pinterest
Tamil
கார்கோ பேண்டுகள் :
90s கார்கோ பேண்டுகள் மீண்டும் ட்ரெண்டாகின்றன! சுறுசுறுப்பான குழந்தைகளுக்கு மிகவும் வசதியான இது, மொபைல் போன்ற பொருட்களை வைக்க உதவும் பாக்கெட்டுகளுடன் செம ஸ்டைலாகவும் இருக்கும்.
Image credits: Pinterest
Tamil
குரோசெட் டிசைன்கள்:
நூல்களால் பின்னப்பட்ட குரோசெட் ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் பார்ப்பதற்கு கைகளால் செய்யப்பட்ட கலைநயமிக்க தோற்றத்தைத் தருகின்றன. இது குழந்தைகளுக்கு ஒரு தனித்துவமான ஸ்டைலை வழங்கும்.
Image credits: Pinterest
Tamil
டெனிம் ஜாக்கெட்டுகள் :
டெனிம் ஜாக்கெட் எக்காலத்திற்கும் ஏற்ற ஆடை. கவுன், லெகின்ஸ் என எதன் மீதும் லேயராக இதை அணியலாம். இது உங்களுக்கு மிகச்சிறந்த மாடர்ன் தோற்றத்தைத் தரும்.
Image credits: Pinterest
Tamil
ஃபாக்ஸ் ஃபர் ஜாக்கெட்டுகள் :
குளிர் காலங்களில் குழந்தைகளுக்கு இதமான கதகதப்பையும், அதே நேரத்தில் ஒரு சொகுசான (Luxury) தோற்றத்தையும் தரக்கூடியது இந்த ஃபர் ஜாக்கெட்டுகள். இவை பல வண்ணங்களில் கிடைக்கின்றன.
Image credits: Pinterest
Tamil
ருச்சிங் ஆடைகள் :
துணிகளை சுருக்கித் தைக்கும் ‘ருச்சிங்’ முறை சாதாரண ஆடைகளையும் ஒரு பார்ட்டி வேர் (Party wear) போல மாற்றிக் காட்டும். இது ஆடைகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது.
Image credits: Pinterest
Tamil
ரஃபிள்ஸ் :
அடுக்கு அடுக்காகத் தைக்கப்படும் ரஃபிள்ஸ் டிசைன் கவுன்கள் மற்றும் ஸ்கர்ட்டுகள் பெண்குழந்தைகளின் ஃபேஷனில் எப்போதுமே முதலிடம். இது குழந்தைகளுக்கு ஒரு க்யூட் லுக்-கைத் தரும்.
Image credits: Pinterest
Tamil
ஷர்ட் டிரஸ்:
சட்டையைப் போன்ற வடிவத்தில் இருக்கும் இந்த ஆடைகள் அணிவதற்கு மிகவும் எளிதானவை. ஸ்போர்ட்ஸ் ஷூக்களுடன் இதை அணியும்போது கேஷுவலான ஒரு மாடர்ன் லுக் கிடைக்கும்.
Image credits: Pinterest
Tamil
பினாஃபோர்
உள்ளே ஒரு டி-சர்ட் அல்லது குளிர்கால டாப்ஸ் அணிந்து, அதன் மேல் அணியக்கூடிய இந்த ஓவரால் ஆடைகள் வருடம் முழுவதும் பயன்படுத்த ஏற்றவை.