life-style

கொத்தமல்லி தழைகளை எப்படி பிரஸ்ஸாக வைப்பது?

Image credits: Pinterest

கொத்தமல்லி

கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் கொத்தமல்லி பயன்படுத்தப்படுகிறது. சமையலில் முதல் சட்னி வரை அதன் சுவை இல்லாமல் முழுமையடையாது. ஆனால் அது மிக விரைவாக கெட்டுப்போகிறது. 

கொத்தமல்லி குறிப்புகள்

அடிக்கடி சந்தைக்குச் சென்று கொத்தமல்லி வாங்கி வருவது இயலாத காரியம். அப்படின்னா வீட்டிலேயே எப்படி ஒரு வாரத்திற்கு கெடாமல் பாதுகாப்பது. 

காகிதத்தில் கொத்துமல்லி

கொத்தமல்லியை காகிதத்தை கொண்டு பாதுகாக்கலாம். கொத்தமல்லியை கழுவி உலர காகிதத்தில் சுற்றி ப்ரிட்ஜ்ஜில் வைக்கலாம். இதனால் கொத்தமல்லி கெட்டுப் போகாது.

டப்பாவில் கொத்தமல்லி

கொத்தமல்லியை பேப்பர் தவிர ஒரு டப்பாவிலும் வைக்கலாம். ஆனால் அதை பேப்பரில் சுற்றி, காற்று நுழையாதபடி டப்பாவை இறுக்கமாக மூடவும்.

நீர் ஜாடியில் கொத்துமல்லி

நீர் ஜாடியில் கொத்தமல்லி தண்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, ஈரத் துணியால் மூடி பிரிட்ஜ்ஜில் வைக்கலாம். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நீரை மாற்ற வேண்டும். 

மஞ்சள் தண்ணீர் பயன்படுகிறது

கொத்தமல்லியை சுத்தம் செய்து மஞ்சள் கலந்த நீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். நன்றாக கழுவி உலர வைத்து, பேப்பர் சுற்றி டப்பாவில் வைத்து பிரிட்ஜ்ஜில் வைக்கவும்.

ஜிப்லாக் பை

கொத்தமல்லி வேரை நீக்கி, கழுவி காய வைத்து பிரீசரில் வைக்கவும். பிரீஸ் ஆன பின்னர் இதை எடுத்து ஜிப்லாக் பையில் வைத்து பிரிட்ஜ்ஜில் வைக்கவும். 

மாணவர்கள் தற்கொலையில் தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

பாலுடன் சாப்பிட கூடாத பழங்கள் எவை?

வீக் எண்டை ருசிகரமா கொண்டாடணுமா? சுவையான 8 குஜராத்தி ஸ்னாக்ஸ் இதோ!

ரொம்ப நாள் காபி பவுடர் பிரெஷா இருக்கணுமா? 5 சூப்பர் டிப்ஸ்!