life-style

வெள்ளை துணியில் உள்ள டீ, மஞ்சள் கறை நீங்க '7' டிப்ஸ்

Image credits: pinterest

பேக்கிங் சோடா

சிறிதளவு பேக்கிங் சோடாவில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போலாக்கி அதை கறையின் மீது தடவி சுமார் 15 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு பிரஷ் மூலம் மெதுவாக தேய்த்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

Image credits: Freepik

வினிகர்

வெள்ளி சட்டையில் இருக்கும் கறை மீது வினிகர் மற்றும் சோப்பு தடவி சிறிது நேரம் கழித்து சூடான நீரில் கழுவினால் கறை மறைந்திருக்கும். 

Image credits: Freepik

எலுமிச்சை சாறு & உப்பு

ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதை கறையின் மீது தேய்த்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கறை இருந்த இடம் இல்லாமல் போயிருக்கும்.

Image credits: Pinterest

டூத் பேஸ்ட்

வெள்ளை சட்டையில் இருக்கும் கறையை போக்க டூத் பேஸ்ட் உதவும். இதற்கு கறை மீது டூத் பேஸ்ட் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் போதும்.

Image credits: Pinterest

சோடா

வெள்ளைத் துணி மீது இருக்கும் கறையை போக்க சோடாவை கறை மீது ஊற்றி மெதுவாக தேய்க்க வேண்டும். இது கறையை சுலபமாக அகற்றி விடும். குறிப்பாக டீ கறைகளை.

Image credits: pinterest

ப்ளீச்சிங் பவுடர்

இதற்கு தண்ணீரில் சிறிதளவு ப்ளீச்சிங் பவுடர் கலந்து அதை வெள்ளைத்துணியில் இருக்கும் கறை மீது தடவி மெதுவாக தேய்க்க வேண்டும். ப்ளீச்சிங் பவுடர் கரையை சுலபமாக நீக்கிவிடும்.

Image credits: social media

ஹைட்ரஜன் பெராக்ஸைட்

வெள்ளை சட்டையில் இருக்கும் மஞ்சள், டீ கறையை போக்க ஹைட்ரஜன் பெராக்ஸைட் உதவும். இதை நேரடியாக கறையின் மீது தடவி சில நிமிடங்கள் கழித்து குளிந்து நீரில் துணியை கழுவவும்.

Image credits: pinterest

அதிகமாக 'தேன்' எடுத்துக்கொண்டால் இந்த 5 பாதிப்பு வரலாம்!

முதுமையை விரட்டும் செம்பருத்தி ஃபேஸ் மாஸ்க்!

தினமும் 3 வால்நட்ஸ் சாப்பிட்டு பாருங்க! அப்புறம் என்ன நடக்குது பாருங்க

உலகின் மிகச்சிறிய பசு: இந்த பசுவின் 1 கிலோ நெய்யின் விலை இவ்வளவா?