Tamil

ஆரோக்கியத்திற்கு வெல்லம்

வெள்ளைச் சர்க்கரைக்குப் சிறந்ததொரு மாற்றாக விளங்கும் வெல்லம், சுவை நிறைந்திருப்பதுடன், ஆரோக்கியத்தைப் பேணவும்உதவுகிறது. உடல் நலனுக்காக பலரும் வெல்லத்தை பயன்படுத்துகிறார்கள்.

Tamil

வெல்லத்தின் பயன்கள்

வெல்லம் இனிப்புப் பண்டங்களில் மட்டுமல்ல, காய்கறி பொரியல், குழம்பு போன்றவற்றிலும் சுவையை சமநிலைப்படுத்த உதவுகிறது. சில ஊர்கள்ல சாம்பார், புளிக்குழம்புல கூட லைட்டா சேர்ப்பாங்க.

Image credits: Getty
Tamil

வெல்லம் நீர்த்துப் போகுதா?

ஆனால் சில நேரங்களில், காற்றுப் புகாத டப்பாவில் வைத்தாலும், காற்று மற்றும் ஈரப்பதம் காரணமாக வெல்லம் பிசுபிசுப்பாக மாறி, கரையத் தொடங்குகிறது. அதில் பூஞ்சையும் வளர ஆரம்பிக்கும்.

Image credits: Getty
Tamil

எளிய கிச்சன் டிப்ஸ்

சில எளிய சமையலறை டிப்ஸ்களைப் பயன்படுத்தி, வெல்லத்தை ஒரு வருடம் முழுவதும் கெட்டுப் போகாமல் எப்படிப் பாதுகாப்பது? ஆண்டு முழுவதும் ஃப்ரெஷ்ஷாகவும், உலர்வாகவும் வைக்கலாம்.

Image credits: Getty
Tamil

கண்ணாடி ஜாடியில் வையுங்கள்

வெல்லத்தை எப்போதும் பிளாஸ்டிக் டப்பாவில் வைக்காதீர்கள். அதற்கு பதிலாக, சுத்தமான கண்ணாடி ஜாடி அல்லது மண்பானையில் சேமித்து வையுங்கள். இதனால் வெல்லத்திற்குள் ஈரப்பதம் செல்லாது.

Image credits: Getty
Tamil

ஜாடியில் வைக்கும் முன்...

வெல்லத்தை டப்பாவில் வைப்பதற்கு முன், அதை சுத்தமான, உலர்ந்த ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வையுங்கள். இந்த பருத்தித் துணி ஈரப்பதத்தை உறிஞ்சி, வெல்லம் கரைவதைத் தடுக்கும்.

Image credits: Getty
Tamil

பிரிஞ்சி இலையைப் பயன்படுத்துங்கள்

வெல்லம் வைத்திருக்கும் டப்பாவில் 2-3 பிரிஞ்சி இலைகளைப் போட்டு வையுங்கள். இந்த இலை இயற்கையாகவே ஈரப்பதத்தை உறிஞ்சும். மேலும், இலையின் வாசனைக்கு எறும்புகளும் அருகில் வராது.

Image credits: freepik
Tamil

பூஞ்சை பிடிக்காமல் இருக்க...

வெல்லத்தில் பூஞ்சை பிடிப்பதை தடுக்க விரும்பினால், அந்த டப்பாவில் 1-2 காய்ந்த மஞ்சள் கொம்புகளைப் போட்டு வையுங்கள். இது வெல்லத்தை நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பாக வைத்திருக்கும்.

Image credits: freepik
Tamil

வெல்லம் பிசுபிசுப்பானால்...

ஒருவேளை வெல்லம் நீர்த்துப் போய், பிசுபிசுப்பாக மாறுவது போல் தோன்றினால், உடனடியாக அதை டப்பாவிலிருந்து வெளியே எடுத்து வெயிலில் வையுங்கள். இதனால் வெல்லம் மீண்டும் கெட்டியாகிவிடும்.

Image credits: Getty

Bedroom Plants: நல்ல தூக்கத்துக்கு படுக்கையறையில் இந்த செடிகளை வளருங்க

Turmeric Water: வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர்.! இவ்வளவு நன்மைகளா?

Silver Bracelet: பார்த்தாலே பிடிக்கும் டிரெண்டிங் மாடல்கள் இதோ!

மனதை கவரும் அழகு.. இந்த ஃப்ளோரல் கம்மல்கள் வேற லெவல்!