Tamil

தோசை மாவு புளிப்பா? இனி கவலையே வேண்டாம்!

தோசை மாவு புளித்து விட்டால் இனி கவலை வேண்டாம். மாவை வீணாக்காமல் அவற்றை பயனுள்ள வகையில் எப்படி பயன்படுத்துவது என பார்ப்போம்.

Tamil

முதல்ல தண்ணி சேருங்க

புளிச்சுப்போன தோசை மாவு இருக்குற பாத்திரத்துல, சுமார் ஒரு லிட்டர் அல்லது மாவின் அளவுக்கு ஏத்த மாதிரி சாதாரண தண்ணிய ஊத்துங்க.

Image credits: Getty
Tamil

நல்லா கலக்குங்க

தண்ணீர் ஊத்துனதுக்கு அப்புறம், ஒரு கரண்டிய வெச்சு மாவ நல்லா கலக்குங்க. மாவும் தண்ணியும் ஒன்னோட ஒன்னு நல்லா கலக்கணும்.

Image credits: Gemini
Tamil

10 நிமிஷம் அப்படியே விடுங்க

கலக்குனதுக்கு அப்புறம், இந்த கலவைய குறைஞ்சது 10 நிமிஷத்துக்கு தொடாதீங்க. மாவு பாத்திரத்தோட அடியில தங்கிடும், புளிப்புத்தன்மை உள்ள தண்ணி மட்டும் மேல மிதந்து வரும்.

Image credits: Instagram
Tamil

மேல இருக்குற தண்ணிய ஊத்திருங்க

பாத்திரத்த ரொம்ப கவனமா சரிச்சு, மேல இருக்குற தண்ணிய மட்டும் வடிச்சு ஊத்திருங்க. அடியில இருக்குற கெட்டியான மாவு பாத்திரத்துலேயே இருக்கட்டும்.

Image credits: Gemini
Tamil

இப்போ மாவு தோசைக்கு ரெடி

இப்போ பாத்திரத்துல மீதமிருக்குற மாவ பயன்படுத்துங்க. இதுல புளிப்புத்தன்மை நல்லா குறைஞ்சிருக்கும், தோசையும் ரொம்ப சுவையா வரும்.

Image credits: Instagram

ஸ்டைலிஷ் லுக்கிற்கு ஏற்ற லேட்டஸ்ட் பிரேஸ்லெட் டிசைன்கள்!

பரோட்டா கொஞ்ச நேரத்துல ரப்பர் மாதிரி ஆகுதா? இதை மாத்துங்க!

சேலை, சுடிதார் எதுவாக இருந்தாலும் அசத்தும் கொலுசு டிசைன்கள்

Chanakya Neeti : இந்த 4 விஷயங்களில் ஆண்களால் பெண்களை ஜெயிக்கவே முடியாதாம்!