life-style
தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் இருக்கும் நார்ச்சத்து குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது.
சப்ஜார் விதையை தண்ணீரில் ஊறவைக்கும் போது அந்த விதைகள் ஊறி போய் அதில் இருக்கும் நார்ச்சத்து அதிகரிக்கும். இதை வெறும் வயிற்றில் குடித்தால் ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
சர்க்கரை அளவை சீராக வைக்க சப்ஜா நீர் முக்கிய பங்கு உண்டு. சப்ஜா விதைகளில் இருக்கும் நார்ச்சத்து செரிமானம் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை மெதுவாக்கி சர்க்கரையை உயராமல் தடுக்கும்.
சப்ஜா விதையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை முகப்பரு போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். தினமும் வெறும் வயிற்றில் சப்ஜா விதை தண்ணீரை குடித்தால் சருமம் பொலிவாகும்.
சப்ஜா விதையில் இருக்கும் வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
சப்ஜா விதைகள் மாரடைப்பை தடுக்கவும் இரத்தத் தட்டு கட்டிகளின் வாய்ப்பை குறைக்கவும் உதவுகிறது. இதயம் தொடர்பான கோளாறுகளுக்கும் உதவுகிறது.
சப்ஜா விதை மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கருவியாக செயல்படுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நரம்பியல் கடத்தி செயல்பாட்டையும் ஒழுங்குபடுத்தும்.