கவிதா கிருஷ்ணமூர்த்தி இப்போது இசை மற்றும் திரைப்படத்துறையில் பொன்விழா கொண்டாடுகிறார்.
கவிதா கிருஷ்ணமூர்த்தி தனது முதல் பாடலை 1976 இல் காதம்பரி படத்திற்காக விலாயத் கானின் இயக்கத்தில் பதிவு செய்தார்.
முகமது ரஃபி முதல் சோனு நிகமுடன் கவிதா பாடல்களைப் பாடியுள்ளார். பப்பி லஹிரி, அனு மாலிக் மற்றும் நதீம்-ஷ்ரவன் போன்ற இசையமைப்பாளர்களுடன் பல சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கியுள்ளார்.
உஸ்தாத் விலாயத் கான், லட்சுமிகாந்த்-பியாரிலால், சச்சின் தேவ் பர்மன், லதா மங்கேஷ்கர், முகமது ரஃபி, கிஷோர் குமார், ஆர்.டி. பர்மன் போன்ற இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இந்தி, போஜ்புரி, தெலுங்கு, ஒரியா, மராத்தி, வங்காளம், கன்னடம், குஜராத்தி, நேபாளி, ராஜஸ்தானி, ஆங்கிலம், உருது, தமிழ், மலையாளம், அஸ்ஸாமி, கொங்கணி, பஞ்சாபி பாடல்களைப் பாடியுள்ளார்.
கவிதா கிருஷ்ணமூர்த்தி 45க்கும் மேற்பட்ட மொழிகளில் 50,000 பாடல்களை பதிவு செய்துள்ளார்.
கவிதா கிருஷ்ணமூர்த்தி நவம்பர் 11, 1999 அன்று பிரபல வயலின் கலைஞரும் இசையமைப்பாளருமான எல். சுப்பிரமணியத்தை மணந்தார்.
சத்ய சாய் பாபா ஒருமுறை கவிதாவிடம், "உங்கள் இசை மூலம் ஒருவரைச் சந்திப்பீர்கள், திருமணம் செய்து கொள்வீர்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று கூறியுள்ளார்.
கவிதாவையும் சுப்பிரமணியத்தையும் இணைத்தது இசைதான். சுப்பிரமணியத்திற்கு நான்கு குழந்தைகள். முதல் மனைவி இறந்துவிட்டார். குழந்தைகளை கவிதா கவனித்துக் கொள்கிறார்.
குழந்தைகளுடன் நெருங்கிய உறவு ஏற்பட்ட பின்னரே எல். சுப்பிரமணியத்தை கவிதா கிருஷ்ணமூர்த்தி மணக்க முடிவு செய்தார்.