life-style
உங்கள் குழந்தைக்கு பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என்றால் அதற்கான காரணத்தை கேளுங்கள். ஆனால் மென்மையாக.
குழந்தைக்கு படிப்பில் ஆர்வம் வர வேண்டுமானால் முதலில் வீட்டில் நேர்மறையான சூழ்நிலையை உருவாக்கவும். படித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.
உங்கள் குழந்தை பள்ளியில் கல்வி சார்ந்த மன அழுத்தம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகளை சந்தித்தால் அவர்களது உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைக்கு படிப்பது ரொம்பவே சிரமமாக உணர்ந்தால், அவரது பள்ளி ஆசிரியரிடம் அதற்குரிய தகுந்த ஆலோசனையை பெறுங்கள்.
குழந்தை காலை எழுவது முதல் இரவு தூங்குவது வரை என அனைத்திற்கும் ஒரு வழக்கத்தை உருவாக்குங்கள். இது அவர்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும்.
குழந்தைக்கு கல்வி தவிர பிற விஷயங்களில் ஆர்வம் இருந்தால் அதில் அவர்களை ஈடுபட அனுமதிக்கவும். இதனால் அவர்களது தன்னம்பிக்கை, புதிய திறன்கள் வளரும்.
குழந்தை பள்ளியில் பிற குழந்தைகளால் துன்புறுத்தப்பட்டாலோ அல்லது அவர்களால் ஏதேனும் அழுத்தத்தை அனுபவித்தால் உடனே அவர்களின் ஆசிரியரிடம் அது குறித்து கேளுங்கள்.
முக்கியமாக குழந்தை மீது எந்த அழுத்தத்தையும் கொடுக்க வேண்டாம். மேலும் அவர்களிடம் மோசமாக நடந்து கொள்ளாதீர்கள். அன்பாக இருங்கள்.