life-style
எலுமிச்சையில் இருக்கும் இயற்கை அமிலங்கள் தரையில் பிடிவாதமான கறையை சுலபமாக நீக்கிவிடும். மேலும் இது பாக்டீரியாக்களை அழித்து, தரையை பளபளக்கச் செய்யும்.
தரையில் எலுமிச்சை சாற்றை ஊற்றி 10 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, பிறகு ஈரமான துணியால் துடைத்தால் தரை பிரகாசமாக இருக்கும்.
தரையில் இருக்கும் விடாப்பிடியான கறையை சுத்தம் செய்ய எலுமிச்சை சாறுடன் சிறிது அளவு உப்பு சேர்க்கவும். உப்பு ஸ்கரப்பராக பயன்படுகின்றது.
பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போலாகி அதை தரையில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு சுத்தம் செய்தால் தரை பளபளக்கும்.
எலுமிச்சையை கொண்டு தரையை சுத்தம் செய்தால் தரையில் இருக்கும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகளைக் கொல்லும். முக்கியமாக தரையில் துர்நாற்றத்தை நீக்கி நல்ல மணத்தை கொடுக்கும்.
நீங்கள் எப்போது வீடு துடைத்தாலும் அந்த தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து துடைத்தால் பூச்சிகள் வராது. சுத்தமாக இருக்கும். நல்ல வாசனையும் அடிக்கும்.
மரத் தரையை சுத்தம் செய்ய எலுமிச்சை சாற்றை லேசாக ஈரமான துணியில் கலந்து பிறகு துடைத்தால் தரை பிரகாசமாக இருக்கும்.