கடையில் இருந்து வாங்கி வந்த ரெண்டே நாளில் வாழைப்பழம் கருத்து, மெத்தென்று ஆகி அழுக ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த சிம்பிள் டிப்ஸ் உங்களுக்காகத்தான்.
life-style Sep 07 2026
Author: Raghupati R Image Credits:Instagram
Tamil
தேவை ஒரே ஒரு டிஷ்யூ பேப்பர்!
வாழைப்பழத்தை ஃப்ரெஷ்ஷாக வைக்க எந்த கெமிக்கலோ, விலை உயர்ந்த பொருளோ தேவையில்லை. ஒரு டிஷ்யூ பேப்பரும், கொஞ்சம் தண்ணீரும் இருந்தாலே போதும்.
Image credits: Instagram
Tamil
தண்ணீரில் நனைத்து எடுங்கள்
முதலில் ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள். அதை தண்ணீரில் நனைத்து, லேசாக பிழிந்து கொள்ளுங்கள் (டிஷ்யூ பேப்பர் கிழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்).
Image credits: Instagram
Tamil
வாழைப்பழ காம்பில் சுற்றவும்
ஈரமான இந்த டிஷ்யூ பேப்பரை, வாழைப்பழ சீப்பின் மேல் இருக்கும் காம்புப் பகுதியில் நன்றாகச் சுற்றி விடுங்கள்.
Image credits: Instagram
Tamil
இது எப்படி வேலை செய்கிறது?
வாழைப்பழத்தின் காம்பில் இருந்து 'எத்திலீன்' என்ற வாயு வெளியாகும். இதுதான் பழம் சீக்கிரம் பழுக்கக் காரணம். காம்பை ஈரமான டிஷ்யூவால் மூடும்போது, இந்த செயல்முறை மெதுவாகும்.
Image credits: Instagram
Tamil
4-5 நாட்கள் வரை ஃப்ரெஷ்!
இப்படி செய்வதால், வாழைப்பழம் கருப்பதும், அழுகுவதும் தடுக்கப்படும். உங்கள் வாழைப்பழம் வழக்கத்தை விட 3-4 நாட்கள் கூடுதலாக ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
Image credits: Instagram
Tamil
இன்றே டிரை பண்ணுங்க!
இனிமேல் வாழைப்பழம் அழுகிப் போகுமே என்ற தலைவலி வேண்டாம். இன்றே இந்த சுலபமான டிரிக்கை முயற்சி செய்து உங்கள் பணத்தை மிச்சப்படுத்துங்கள்!