ஏர்பாட்ஸ் பயன்படுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள்!!
life-style Aug 28 2024
Author: Asianetnews Tamil Stories Image Credits:Twitter
Tamil
காது கேளாமை
நீண்ட நேரம் அதிக ஒலியில் ஏர்பாட்ஸில் இசை அல்லது ஆடியோ கேட்பது காது கேளாமைக்கு வழிவகுக்கும். ஏனெனில், இது காதுகளின் உள் சிறிய செல்களை சேதப்படுத்தும்.
Tamil
காது தொற்று
இயர்போன்கள் அல்லது ஏர்பாட்ஸ் காதுகளில் ஈரப்பதம் மற்றும் பாக்டீரியாக்களை அதிகரிக்கும். இதனால் காது தொற்று ஏற்படும். மற்றவர்களின இயர்போன்கள், ஏர்பாட்ஸ் பயன்படுத்தக் கூடாது.
Tamil
டின்னிடஸ்
டின்னிடஸ் என்பது உங்கள் காதுகளில் தொடர்ந்து ஒலி அல்லது சத்தம் கேட்கும் ஒரு நிலை. இது பொதுவாக இயர்போன்கள் அல்லது ஏர்பாட்ஸைப் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது.
Tamil
காது வலி
நீண்ட நேரம் இயர்போன் அல்லது ஏர்பாட்ஸ் அணிந்தால் காது வலி, அசௌகரியம், காதுகளில் அழுத்தம் ஏற்படலாம். சரியாக பொருந்தாத இயர்போன்களை அணியும் போது இவை ஏற்படலாம்.
Tamil
மன ஆரோக்கிம்
நிபுணர்களின் கூற்றுப்படி, தொடர்ந்து இயர்போன்களைப் பயன்படுத்துவது மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.
Tamil
விபத்துகள் ஏற்படலாம்
நடக்கும்போது, வாகனம் ஓட்டும்போது இயர்போன்கள் அல்லது ஏர்பாட்ஸ் பயன்படுத்தினால் கவனம் சிதறும். இதனால், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
Tamil
தலைவலி
ஏர்பாட்ஸ், இயர்போன்கள் மூலம் அதிக ஒலியில் இசை கேட்பது தலைவலிக்கு வழிவகுக்கும். உண்மையில், அதிக ஒலி அலைகள் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன.
Tamil
தரமான ஏர்பாட்ஸ்
ஏர்பாட்ஸின் அதிகபட்ச ஒலியளவை 60% ஆக குறைத்து, காதுகளுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுக்கவும். இயர்போன் தவறாமல் சுத்தம் செய்து, நல்ல ஏர்பாட்ஸை தேர்வு செய்யவும்.