life-style

துருப்பிடித்த பாத்திரங்கள் 5 நிமிடங்களில் பளபளக்கும்!!

Image credits: Freepik

ஸ்டீல் பாத்திரங்கள்

தற்போது பெரும்பாலான வீடுகளில் ஸ்டீல் பாத்திரங்களைத் தான் பயன்படுத்துகின்றனர். ஏன் வீட்டில் சிங்குகளையும் ஸ்டீலில் தான் அமைகின்றனர்.

துருப்பிடித்த பாத்திரங்கள்

சமையலறையில் இருக்கும் ஸ்டீல் பொருட்கள் துருப்பிடித்து, எவ்வளவு முயற்சித்தும் அவை நீங்காமல் இருந்தால் இனி கவலையை விடுங்கள். 

ஸ்டீல் பாத்திரங்கள் சுத்தம் செய்ய

பாத்திரத்தில் துருவை நீக்க சில குறிப்புகள் கொடுக்கிறோம். ஸ்டீல் பாத்திரங்களில் துரு நீங்கி வெள்ளி போல பளபளக்கும்.

வினிகர்

ஊறுகாயில் பயன்படுத்தப்படும் வினிகர் துருவை நீக்க உபயோக்கிக்கலாம். துருப்பிடித்த பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் வினிகரை ஊற்றி உலர விடவும். பின்னர் பிரஷ் மூலம் தேய்த்து கழுவவும். 

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா இயற்கையான சுத்தம் செய்யும் பொருள். இது கறைகளை நீக்கப் பயன்படும்.  தண்ணீரில் 2 டீஸ்பூன் சோடா கலந்து பேஸ்ட் செய்து, துரு எங்குள்ளதோ அங்கே தூவி அரை மணி நேரம் ஊற விடவும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை சோப்பு நீரில் கலந்து சோப்பு போல பயன்படுத்தவும். இதில் உள்ள ஆக்சாலிக் அமிலம் துருவை நீக்க உதவும்.

எலுமிச்சை

துரு குறைவாக இருந்தால் எலுமிச்சை போதும். அதிகமாக இருந்தால், பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாறு சேர்த்து பாத்திரத்தில் ஊற்றி சுமார் 10 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

உண்மையான பட்டுப் புடவையை எப்படி அறிவது?

ரூ. 10 ரயில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டில் இரவில் ஸ்டேஷனில் தங்கலாமா?

அசைவ உணவை அனுமதிக்காத 10 இந்திய நகரங்கள் இதோ!

Brunei Sultan: புருனே சுல்தானுக்கு 7000 கார்கள்; தங்க அரண்மனை!!