life-style

பாலில் எப்படி அதிக வெண்ணெய் எடுப்பது; இதோ டிப்ஸ்!!

Image credits: freepik

அதிக பாலாடை

பாலில் அதிக பாலாடை கட்ட வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். ஆனால், அதுபோல் நடக்காது. இதற்கு கலப்பட பால் தான் காரணம் என்று கூறுவார்கள். அனால், இது சிறிய தவறுகளால் நடக்கிறது.

பாலாடை

பால் கொதிக்கும் போது சிறிய தவறுகளை மக்கள் செய்கிறார்கள். அதனால் அதிக பாலாடை  படிவதில்லை. இங்கே சிறிய குறிப்புகளை கொடுக்கிறோம்.

பாலாடை டிரிக்ஸ்

பாலில் அதிக பாலாடை கட்ட வேண்டும் என்றால், பாலை நன்றாக கொதிக்க வைக்கவும். அதிக பாலாடை வேண்டும் என்றால் 8-10 நிமிடங்கள் கொதிக்க வேண்டும். அதிக பாலாடை கிடைக்கும். 

அடுப்பை அணைக்க வேண்டாம்

பால் கொதித்ததும் மக்கள் அடுப்பை அணைத்து விடுவார்கள். அப்படி செய்யக்கூடாது. கொதித்த பிறகு பாலை 8 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க வேண்டும். 

பாலை குளிர்வித்தல்

பால் இறக்கிய பின்னர் ஆவியாகி வெளியேறும் வகையில் அதன் மேல் லேசான தட்டு வைத்து மூடவும். இதன் மூலமும் அதிக பாலாடை கிடைக்கும். 

ஃப்ரிட்ஜில் வைத்தல்

பாலாடை கிடைக்க சிலர் சூடான பாலை ஃப்ரிட்ஜில் வைத்து விடுவார்கள். இது தவறு. ஆறிய பின்னர்தான் வைக்க வேண்டும். இதன் மூலமும் அதிக பாலாடை கிடைக்கும். 

பாலாடை எடுக்கும் முறை

பாலாடை கட்டிய பின்னர் அதை தனியாக எடுத்து விடவும். அதை எடுக்காமல் மீண்டும் காய்ச்சினால் பாலாடை சூட்டினால் கறைந்துவிடும். .

Find Next One