Tamil

வீட்டிலேயே வளர்க்கலாம்

சமையலுக்கு தினமும் தேவைப்படும் இஞ்சியை இனி கடையில் வாங்க வேண்டாம். உங்கள் வீட்டிலேயே சுலபமாக வளர்க்கலாம். அதற்கான எளிய டிப்ஸ் இதோ.
Tamil

தரமான விதை இஞ்சி

கடையில் வாங்கும் இஞ்சியையே விதைக்கு பயன்படுத்தலாம். காய்ந்து போகாத, ஒன்றுக்கு மேற்பட்ட முளைகள் வந்த, நல்ல பெரிய இஞ்சித் துண்டுகளைத் தேர்ந்தெடுங்கள்.
Image credits: google
Tamil

சரியான தொட்டி/இடம்

இஞ்சி வேர்கள் பக்கவாட்டில் பரவும் என்பதால், ஆழமான தொட்டியை விட அகலமான தொட்டி அல்லது பிளாஸ்டிக் பைகளைத் தேர்ந்தெடுக்கவும். வடிகால் துளைகள் மிக அவசியம்.

Image credits: google
Tamil

மண் கலவை தயாரிப்பு

இஞ்சிக்கு தண்ணீர் தேங்கக் கூடாது. கோகோ பீட், மண்புழு அல்லது தொழு உரம், செம்மண் மற்றும் மணலைச் சம அளவில் கலந்து வடிகால் வசதியுள்ள மண் கலவைத் தயாரிக்கவும்.

Image credits: google
Tamil

நடும் முறை

இஞ்சித் துண்டுகளை 1 முதல் 2 இன்ச் ஆழத்தில் மண்ணில் நட வேண்டும். முளைகள் மேல்நோக்கி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். நட்ட பிறகு, லேசாக மண்ணைத் தூவி மூடி விடுங்கள்.
Image credits: google
Tamil

சூரிய ஒளி

இஞ்சிக்கு நேரடி சூரிய ஒளி தேவையில்லை. மிதமான நிழல் இருக்கும் இடமே சிறந்தது. தினமும் 2-5 மணி நேரம் மட்டும் வெயில் படும் ஜன்னல் ஓரம், பால்கனி அல்லது மர நிழலில் செடியை வையுங்கள்.
Image credits: google
Tamil

தண்ணீர் பாய்ச்சுவது

மண்ணில் எப்போதும் லேசான ஈரப்பதம் இருக்க வேண்டும். தண்ணீர் தேங்கக் கூடாது. மேல் மண் காய்ந்ததும் தண்ணீர் ஊற்றினால் போதும். மாதம் ஒருமுறை சிறிதளவு இயற்கை உரம் அல்லது சாம்பல் இடலாம்.

Image credits: google
Tamil

மூடாக்கு போடுவது

இஞ்சி நட்ட பின் காய்ந்த இலை அல்லது வைக்கோலால் மூடவும்; இது ஈரப்பதத்தைக் காக்கும். 8-10 மாதங்களில் இலைகள் மஞ்சளாகி காய்ந்ததும் அறுவடை செய்யலாம்.

Image credits: google

Nath Nose Rings : புதிய வைரல் டிரெண்டில் 'நத்து' மூக்குத்திடிசைன்கள்!

Kitchen Sink: கிச்சன் சிங்கை பளிச்னு வைக்க இந்த சிம்பிள் டிப்ஸ் போதும்!

முடி அடர்த்தியா வளர.. பயோட்டின் நிறைந்த இந்த 6 உணவுகளை சாப்பிடுங்க!

Fish Cleaning: மீன் கவுச்சி வாடை போக்க சூப்பர் டிப்ஸ்.!